மைக்ரோசாப்ட் எக்சல் தொகுப்பில் உருவாக்கிய எக்சல் பைல்களை நாம் பிடிஎப் பைல்களாக கன்வெர்ட் செய்து வைத்திருப்போம். ஒருசில நேரங்களில் எக்சல் பைலை அழித்துவிட்டு பிடிஎப் பைலை மட்டும் வைத்திருப்போம். அந்த நேரத்தில் குறிப்பிட்ட எக்சல் பைலில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் நம்முடைய பாடு திண்டாட்டம் தான். இதுபோன்ற சமயங்களில் பிடிஎப் பைலை எப்படியாவது கன்வெர்ட் செய்து எக்சல் பைலாக மாற்றி எடிட் செய்துவிட வேண்டும் என்று நினைத்து இணையத்தில் இதற்கான உதவியை நாடி செல்வோம். ஆன்லைன் மூலமாக கன்வெர்ட் செய்யலாம் என்றால் சரியான முறையில் கன்வெர்ட் ஆகாது. எதாவது ஒரு மென்பொருளை தரவிறக்கி அதன் மூலம் கன்வெர்ட் செய்துவிடலாம் என்றால் அதுவும் முடியாது. நாம் தேடிபோகும் மென்பொருளில் எதாவது ஒருசில குறைகள் இருக்கும். குறிப்பாக அந்த மென்பொருளானது பணம் செலுத்தி பெற வேண்டியதாக இருக்கும். அப்படியே இலவசமாக மென்பொருள் கிடைத்தாலும் அது சரியாக வேலை செய்யாது. இதுபோன்ற குறைகள் எதுவும் இல்லாமல் ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. அதுவும் இலவச லைசன்ஸ் கீயுடன்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
சுட்டியில் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும். லைசன்ஸ் கீயும் தரவிறக்க பகுதியிலேயே இருக்கும். Q5NS2-XMRPV-P3F7C-G2VGK இந்த கீயை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக கணினியில் பதிந்து கொள்ளவும். இந்த மென்பொருளை நீங்கள் இலவசமாக 2011 ஏப்ரல் 20 வரை மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடதக்கது. பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.
பின் எந்த பைலை கன்வெர்ட் செய்ய வேண்டும் அந்த பிடிஎப் பைலை தேர்வு செய்து நுழைக்கவும். பின் எந்த இடத்தில் கன்வெர்ட் செய்த பைலை சேமிக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு கொள்ளவும். பின் Convert என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்த சில மணி நேரங்களில் உங்களுடைய பைலானது எக்சல் பைலாக கன்வெர்ட் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.
இதுபோல பைலை கன்வெர்ட் செய்யும் போது வேண்டுமானால் குறிப்பிட்ட பக்கங்களை மட்டும் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளில் ட்ராக் அன்ட் ட்ராப் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. இவ்வாறு நாம் கன்வெர்ட் செய்யும் போது மைரோசாப் எக்சல் தொகுப்போ பிடிஎப் ரீடரோ எதுவும் தேவையில்லை. கடவுச்சொல் புகுத்தப்பட்ட பைல்களையும் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். பிடிஎப் பைலில் இருக்கும் படம், எழுத்து ஆகியவை சரியான முறையில் கன்வெர்ட் செய்யப்படும். ஒரே நேரத்தில் பல்வேறு பிடிஎப் பைல்களை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ் 98, ME, NT, 2000, XP, 2003, Vista மற்றும் விண்டோஸ் 7 ஆகிய இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும்.
அன்புடன்
கண்ணன்