ykannan

Friday, August 5, 2011

அனைத்துவித தளங்களில் இருந்தும் வேகமாக வீடியோக்கள் தரவிறக்க

நண்பர்களே நாம் நிறைய வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகள் மற்றும் புத்தகங்களை தரவிறக்கம் செய்வோம்.

எந்த மாதிரி தளத்தில் செய்வோம் என்றால் Bittorent, Rapidshare, Megaupload, MediaFire, Hotfile, Netload.in, FIlesonic, Easy-share, Megashare, மற்றும் Fileserve போன்ற தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்வோம். இதில் உள்ள அனைத்திலும் ஒரு பிரச்சனை நேரம் மற்றும் தரவிறக்கும் வேகம் தான். ஒரு தளங்களில் ஒரு கோப்பினை தரவிறக்கம் செய்ய முயற்சி செய்தால் முதலில் தரவிறக்க 60 விநாடிகள் வரை காத்திருக்க வேண்டும். அதன் பிறகு தரவிறக்கம் செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் தரவிறக்க வேகம் மிகவும் குறைவாகவும் இருக்கும்.

இதை தீர்க்க ஒரு இலவச தளம் உள்ளது. அதன் பெயர் fetch.io இது ஒரு Cloud Computing முறையில் இயங்ககூடிய தளம்.

இந்த வலைத்தளம் மூலம் Bittorent, Rapidshare, Megaupload, MediaFire, Hotfile, Netload.in, FIlesonic, Easy-share, Megashare, மற்றும் Fileserve போன்ற தளங்களில் நேரக் காத்திருப்பு இல்லாமல் தரவிறக்க முடியும்.


இதில் ஒரே நேரத்தில் பலதரப்பட்ட தளங்களிலுருந்து தரவிறக்கம் செய்ய முடியும்.

தரவிறக்கப்படும் வீடியோ கோப்புகள் நேரடியாக MP4 ஆக மாற்றி தரும்.



இந்த வலைத்தளத்தில் மூலம் நான் பத்து எம்பி உள்ள வீடியோ கோப்புகள் ஓரு மூன்று விநாடிகளுக்குள் தரவிறக்கித்தந்தது.

இணையத்தள சுட்டி.

அன்புடன்

கண்ணன்

வயர்லெஸ் நெட்வொர்க் வாட்சர்

இப்பொழுதெல்லாம் கணினி இல்லாத வீடு கிடையாது. அது போல இணைய இணைப்பு இல்லாத வீடும் கிடையாது. அவ்வாறு இணைய இணைப்பு வாங்குபவர்கள் வயர்லெஸ் எனப்படும் வை-பையுடன் இணைந்து இருக்கும். இவ்வாறு கனெக்ஷன் வைத்திருப்பவர்கள் சரியான கான்பிகரேஷன் இல்லாமல் சுலபமாக கனெக்ட் செய்ய வேண்டும் என்பதற்காக வை பை பாஸ்வேர்ட் கொடுக்காமல் கான்பிகரேசன் செய்வார்கள் சிலர். அவ்வாறு செய்வதனால் என்ன ஆகும் திறந்த வீட்டில் ஏதோ நுழைவது போல கிடைத்தது வழி என்று அனைவரும் நுழைந்து உங்கள் கணக்கில் பிரவுஸ் செய்து உங்களுக்கு பில் எகிற வைப்பார்கள்.

சரி உங்கள் வயர்லெஸ்ஸில் யார் இணைந்திருக்கிறார்கள் என்று கண்டறிய இந்த சிறிய மென்பொருள் மட்டும் போதும்.

இந்த சிறிய மென்பொருள் 217 கேபி மட்டுமே

இந்த சிறிய மென்பொருள் மூலம் உங்கள் வைபையில் இணைந்திருப்பவரது ஐபி முகவரி, கணினியின் பெயர், கணினி எண் (Mac Address), எந்த வகையான நெட்வொர்க் அடாப்டர் என்றும் தெரிந்து கொள்ள முடியும்

மென்பொருள் தரவிறக்க முகவரி.

அன்புடன்

கண்ணன்

மெகா வீடியோவில் தொடர்ந்து வீடியோ பார்க்க புதிய சிலந்தி ப்ளேயர்

நண்பர்களே பாடல்கள் கேட்க எத்தனை ப்ளேயர்கள் இருந்தாலும் புதிய ப்ளேயர்களை முயன்று பார்ப்பதில் தவறு ஒன்றுமில்லையே. நான் எப்பொழுதும் கணினியில் பாட்டு கேட்பதாகாக இருந்தால் Winamp Media Player படம் பார்ப்பதாக இருந்தால் VLC Media Player உபயோகிப்பவன். அதனால் புதியதாக வந்திருக்கும் Spider Player பாட்டு கேட்பதற்காக முயன்று பார்த்தேன் நன்றாகதான் இருந்தது. இதில் நிறைய வசதிகள் உள்ளது


இந்த மென்பொருளின் வசதிகள் தெரிந்து கொள்ள சுட்டி

மென்பொருளை தரவிறக்க சுட்டி

இந்த மென்பொருள் ஒரு Freeware ஆகும்.

Professional Version வருகிறது அதற்கு மென்பொருளை தரவிறக்கி ரெஜிஸ்டர் செய்யும் பொழுது இந்த கோடு கொடுத்தால் போதும். 27U3Z909I95-KK147A893S4K6Y1M0F-780363812 வ்வளவுதான் முடிந்தது.

இந்த மென்பொருளின் பெயர் Spider ஆகும்.


Unlimited View in Mega Video


நிறைய நண்பர்கள் நேரடியாக படங்களை தரவிறக்கி பார்க்காமல் இணையம் வழியே படம் பார்ப்பவர்கள் உண்டு. அது மாதிரி பார்ப்பவர்களுக்கு Mega Video என்ற தளம் தெரியாமல் இருக்காது.




இந்த தளத்தில் இலவசமாக 75 நிமிடங்கள் மட்டுமே படங்கள் பார்க்க இயலும் சில படங்கள் 1 மணி நேரத்திற்கும் மேல் இருக்கும். இந்த நேரத்தில் நம்மால் கிளைமேக்ஸ் சீன்கள் மட்டுமே பார்க்க இயலாமல் போகலாம். இதற்கு ஒரு வழி இருக்கிறது. இந்த தளத்திற்கு சென்று உங்கள் Mega Video லிங்கை காப்பி செய்து இங்கே கொடுத்தால் போதும் உங்கள் படம் முழுவதுமாக இந்த தளத்தின் ஊடாக தெரியும். இணைய தளம். சுட்டி

இதற்கான குரோம் ஆடு ஆனும் உண்டு சுட்டி

அன்புடன்

கண்ணன்

Thursday, August 4, 2011

Error Code, Function Key

Function key நாம் தெரிந்து கொள்ள வேண்டிய shortcut key ஆகும், அதே போல இணையத்தில் நாம் அடிக்கடி சந்திப்பது Error Codes. இன்று நாம் அடிக்கடி பயன்படுத்தும் Function Key பற்றியும், Error Code பற்றியும் இந்த பதிவில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.


Error Codes :


400

இது bad Request Error எனப்படும். Server ஆனது தங்களது கோரிக்கையை புரிந்து கொள்ள முடியவில்லை என்று வைத்துக் கொள்ளலாம். நீங்கள் டைப் செய்த URL ஆனது தவறானதாக இருக்கலாம்.



401

நீங்கள் Unauthorized பக்கத்தை open செய்ய விரும்புவதாக கம்ப்யூட்டர் நினைத்துக் கொள்ளும். Webpage ஐ ஓபன் செய்ய உங்கள் username மற்றும் Password போன்றவற்றை செக் செய்யவும்.



402

இது payment Required Error எனப்படும்.


403

குறிப்பிட்ட தளம் தங்களை தடை செய்து உள்ளது. அதற்கான Error Code இது.


404

இந்த error தோன்றினால் குறிப்பிட்ட தளத்தின் பெயர், முகவரி மாறி இருப்பதாக பொருள். URL Spelling ஐ செக் செய்யவும்.


408


இது Time Out Error எனப்படும். குறிப்பிடப்பட்ட நேரத்திற்க்கு பின் அந்த முகவரியை தொடர்பு கொண்டால் இது போல வரக்கூடும்.



Function Keys:


F1

  • இது பெரும்பாலும் எல்லா ப்ரோக்ராம்களிலும் Help Screen ஐ ஓபன் செய்யப் பயன்படுகிறது.
  • CMOS Setup இலும் பயன்படுகிறது.
  • Windows Key+ F1 Help Screen ஓபன் செய்ய.

F2

  • இது Highlight செய்யபட்ட file or folder or Icon க்கு Rename செய்யப் பயன்படுகிறது.
Microsoft Word இல் இதன் பயன்கள்:
  • Alt + Ctrl + F2--> open a new document in Microsoft Word.
  • Ctrl + F2--> display the print preview window in Microsoft Word.
  • CMOS Setup இலும் பயன்படுகிறது.


F3

  • இது நிறைய ப்ரோக்ராம்களில் Search option ஓபன் செய்ய பயன்படுகிறது.
  • MS-DOS இல் கடைசி வரியை Repeat செய்ய பயன்படுகிறது.
  • MS WORD இல் upper case இல் இருந்து lower case க்கு வார்த்தை முழுவதையும் மாற்ற பயன்படுகிறது.

F4

  • Find window ஓபன் செய்ய(check in the My Computer )
  • கடைசியாக நடந்த Action ஐ Repeat செய்ய பயன்படுகிறது.(உதாரணம் MS WORD இல் ஒரு line ஐ தொடர்ந்து Paste செய்ய இது எளிதான வழி.)
  • Alt+F4 will Close all Programs.
  • Ctrl+ F4 will close current Program.

F5

  • Reload or Refresh
  • Open the find, replace, and go to window in Microsoft Word
  • PowerPoint இல் Slide Show ஸ்டார்ட் செய்ய.


F6

  • cursor ஐ address bar க்கு மாற்றும். (IE, Mozilla)
  • Ctrl + Shift + F6 இது புதிய MS WORD Document ஐ ஓபன் செய்யும்.

F7

  • MS இல் Spell Check & Grammar Check செய்ய பயன்படும். (Word, Outlook,etc )
  • Mozilla வில் Caret Browsing ஐ ON செய்ய பயன்படும்.

F8

விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும் போது நாம் Safe Mode Access செய்ய இது பயன்படும்


F9

Quark 5.0 வில் Measurement toolbar ஓபன் செய்ய பயன்படுவதாக உள்ளது. அதுபற்றி தெரிந்தவர்கள் கமெண்ட் பாக்ஸில் சொல்லவும்.


F10

  • இது MS இல் MenuBar ஓபன் செய்ய பயன்படுகிறது. (MS WORD இல் முயற்சி செய்யவும்.)
  • Shift+F10 Right Click ஆக செயல்படும்.
  • Access the hidden recovery partition on HP and Sony computers.

F11

  • இன்டெர்நெட் பிரவுசர்களில் Full Screen கொண்டுவர பயன்படும்.
  • Ctrl + F11 as computer is starting to access the hidden recovery partition on many Dell computers,eMachines, Gateway, and Lenovo computers.

F12

  • MS Word இல் save as menu வை ஓபன் செய்ய பயன்படும்.
  • Shift+F12 will Save MS Word
அன்புடன்

கண்ணன்

format செய்யாமல் New partition செய்யலாம்

நண்பர்களே நாம் புதிதாக கம்ப்யூட்டர் வாங்கி வந்து பார்த்தால் OS போட்டு கொடுத்த கடைக்காரன் ஒரே ட்ரைவ் ஆக போட்டு கொடுத்து இருப்பான். வட போச்சே என்று தலயில் கை எல்லாம் வைக்க வேண்டாம் மிக அருமையான ஒரு வசதியை விண்டோஸ் நமக்கு கொடுத்து உள்ளது. எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.


முதலில் My Computerright click செய்து Manage என்பதை கிளிக் செய்து ஓபன் செய்யவும். இதில் Storage--> Disk Management இதில் உங்கள் கம்ப்யூட்டரின் Hard Disk இன் Size, Drive எடுத்துக் கொண்டுள்ள Size போன்றவை இருக்கும்.

இப்போது பாருங்கள்.கீழே உள்ளது போல உங்கள் Disk Management பகுதி இருக்கும்.


படத்தை பெரிய Size ஆக பார்க்க : இங்கே


இதில் கீழே உள்ள இடத்தில் பாருங்கள் Free Space என்று ஒரு பகுதி இருந்தால் அது இன்னும் partition செய்யப் படாமல் இருக்கிறது என்று அர்த்தம்.இங்கு நான் உங்களுக்காக என் ட்ரைவில் Free Space உருவாக்கி உள்ளேன். இப்போது நான் ஒவ்வொன்றாக வரிசையாக சொல்கிறேன்.

1. Free Space ஐ partition செய்வது எப்படி ?

இது மிகவும் எளிது மேலே உள்ளது போல Free space என்று காட்டப்படும் இடத்தில் Right Click செய்து New Simple Volume... என்பதை கொடுக்கவும். இப்போது அதிகம் free space இருந்தால், மேலும் புதிய ட்ரைவ்கள் உருவாக்க விரும்பினால் நீங்கள் விரும்பும் அளவு மட்டும் கொடுத்து புதிய ட்ரைவ் உருவாக்கலாம்.

அதாவது 456668 MB Free Space இருந்தால் ஒரு ட்ரைவ் க்கு இவ்வளவு வேண்டாம் என்றால் இதில் பாதி மட்டும் கொடுக்கவும், இப்படி செய்தால் மீதி Free Space ஆகவே இருக்கும் மீண்டும் ஒரு புதிய drive உருவாக்கிக் கொள்ளலாம். இப்படி எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.

புதிய ட்ரைவை My Computer இல் Format செய்து விட்டு ஓபன் செய்யவும்.

2. அதிகப்படியாக உள்ளதை குறைப்பது எப்படி?

இதுவும் சென்றதை போலவே. இப்போது உங்கள் கம்ப்யூட்டரில் C drive க்கு 100 GB கொடுத்து இருந்தால் அது வேஸ்ட் தான். எப்படி குறைப்பது?
இப்போது உங்கள் ட்ரைவில் எது அதிகமாக உள்ளதோ அதை கீழே உள்ள பகுதியிலேயே Right Click செய்து Shrink Volume.... என்பதை கொடுக்கவும்.


இப்போது மேலே உள்ள படம் வந்து கொஞ்ச நேரம் load ஆகும் பின்னர் எவ்வளவு shrink செய்ய முடியும் என்பதை காட்டும். காட்டும் அளவை விட கொஞ்சம் குறைவாக, உங்களுக்கு தேவையான அளவு shrink செய்யவும். கவனிக்க இங்கு எல்லாம் MB இல் காண்பிக்கும் 1000 MB(or 1024 MB )= 1 GB. இதன்படி சரியாக GB யில் shrink செய்யவும்.

முக்கியமான விஷயம் ஒரு ட்ரைவ் இல் shrink செய்ததை வைத்து புதிய Drive மட்டுமே உருவாக்க முடியும், அல்லது அதே Drive இல் மீண்டும் Extend செய்யலாம். வேறு ஒரு Existing ட்ரைவ்க்கு பயன்படுத்த முடியாது.


3. Extend செய்வது எப்படி?

இது shrink செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும்.அதிகமாக shrink செய்து விட்டால் இதன் மூலம் மீண்டும் drive சைஸ் ஐ அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

அன்புடன்

கண்ணன்

Notepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி?

நமது கம்ப்யூட்டரில் நாம் நமக்கு தனிப்பட்ட விஷயங்களை வைத்து இருப்போம் அவற்றை மற்றவர்களிடம் இருந்து மறைத்து வைக்க சில சாஃப்ட்வேர்களையும் பயன்படுத்தி இருப்போம். ஆனால் அவை மற்றவர்க்கு நாம் அதை பயன்படுத்துவது தெரிந்தும் இருக்கும். எப்படி இதை மற்றவர்க்கு தெரியாமல் சாஃப்ட்வேர் இல்லாமல் செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.
  • முதலில் notepad ஐ ஓபன் செய்து கீழே உள்ள coding ஐ copy செய்து paste செய்யவும்.


cls
@ECHO OFF
title Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure u want to Lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock folder
set/p "pass=>"
if NOT %pass%==type your password here goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End
:End

இங்கு பச்சை நிறப் பிண்ணனியில் உள்ள type your password here என்பதற்க்கு பதிலாக உங்கள் password ஐ நீங்கள் தரலாம்.

இப்போது இந்த file ஐ நீங்கள் என்ன பெயரில் மற்றும் எங்கு வேண்டுமானாலும் save செய்யுங்கள். ஆனால் அதை .bat என்ற extension உடன் Save செய்யவும். (Ex: yourname.bat)

இப்போது நீங்கள் Save செய்த இடத்தில் ஒரு புது File ஒன்று நீங்கள் குறிப்பிட்ட பெயரில்(Ex: yourname) உருவாகி இருக்கும்.

அதை click செய்யவும் இப்போது "Locker" என்ற பெயரில் புதிய Folder ஒன்று அங்கு உருவாகி இருக்கும்.

புதிய ஃபோல்டரில் உங்கள் personal File களை copy செய்யவும்.

இப்போது வெளியே வந்து மீண்டும் உங்கள் yourname ஐ click செய்து ஓபன் செய்யவும்.

இப்போது command promptஆனது ஓபன் ஆகி இந்த ஃபோல்டர் ஐ Secure செய்யவா என்று கேட்கும். இப்போது இங்கு Y என கொடுக்கவும். இப்போது பாருங்கள் உங்கள் ஃபோல்டர் மறைந்து இருக்கும்.

மீண்டும் yourname ஐ ஓபன் செய்து command prompt இல் உங்கள் Password கொடுத்தால் அது மீண்டும் வந்து விடும்.

இதை நீங்கள் தேவையான போது செய்து கொள்ளலாம்.

உங்கள் yourname ஐ Hidden செய்து வைப்பதன் மூலம் அதையும் மறைத்து வைக்கலாம். {மீண்டும் Hidden செய்த folder ஐ பார்க்க My computer--> Tools--> Folder Options--> View--> Click "Show Hidden Files, Folders and Drives". }

நீங்கள் Password ஐ மறந்து விட்டாலும் இந்த Notepad File ஐ ஓபன் செய்து அதில் ஏற்கனவே password கொடுத்த இடத்தில் பார்த்து நினைவுபடுத்திக் கொள்ளலாம்.


அன்புடன்

கண்ணன்