ykannan: ஸ்கேனிங்

Thursday, August 19, 2010

ஸ்கேனிங்

ஸ்கேனிங் என்பது மருத்துவ ரீதியாக பயன்படுத்தப்படும் முக்கியமான பரிசோதனை.

இந்த ஸ்கேனிங் மூலம் உடலின் உட்புற உறுப்புக்களில் நோய்கள் மூலம் ஏற்படும் மாற்றங்களை வெளியில் இருந்தே அறிந்து கொள்ள முடியும்.

ஸ்கேனிங் பலமுறைகள் மூலம் செய்யப்படலாம்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங்(ultra sound scanning)-
இதிலே சத்த அலைகள் பயன்படுத்தப்படும். அதாவது சத்த அலைகள் செலுத்தப்பட்டு அவை உள் உறுப்புக்களில் பட்டு தெறித்து வருவதை பொறுத்து நோய்கள்இனங்கானப்படலாம்.

இதிலே வெறும் சத்த அலைகளே பயன்படுத்தப் படுவதால் இவை உடலுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.
மேலும் கர்ப்பினிகளிலே குழந்தையின் நிலைமையை அறிந்து கொள்ளவும் இந்த ஸ்கேனிங் பயன்படுத்தப்படும்.இதனால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

CT ஸ்கேனிங் -
இது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங்கை விட அதிக தகவல்களைப் தரக் கூடியது . ஆனாலும் இதிலே எக்ஸ்ரே கதிர்கள் பயன் படுத்தப் படுவதால் இவை பிற்காலத்திலே புற்று நோய்களை ஏற்படுத்தும் அளவுக்கு பயங்கரமானவை. அதனால் தேவை இல்லாமல் இந்த ஸ்கேன் செய்யப் படக்கூடாது.
கர்ப்ப காலத்திலேயே இது முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டும்.


MRI ஸ்கேனிங் -
இதுவும் CT ஸ்கேன் போல் சிறந்தது. மேலும் இதிலே காந்தப் புல அலைகள் பயன்படுத்துவதால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
ஆனாலும் இது சற்று செலவு கூடியது .


இந்த மூன்றிலும் கர்ப்ப காலத்தில் செய்யப்படும் ஸ்கேன் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங்(ultra sound scanning) ஆகும் .இதனால் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

அன்புடன்

கண்ணன்

1 comment: