ykannan: thumbs.db என்றால் என்ன?

Wednesday, June 8, 2011

thumbs.db என்றால் என்ன?

இதை கணணி பயன்படுத்துபவர்கள் ஒருதடவையேனும் உங்கள் கணனியில் கண்டிருப்பீர்கள்.கம்ப்யூட்டரில் thumbs.db என்ற பைல் உள்ளதே, அழித்தாலும் போக மாட்டேன்கிறது, இது என்ன வைரஸா, இல்லை ஸ்பைவேரா? என்று குழம்பியிருப்பீர்கள்.

இரண்டும் இல்லை, விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000 (SP4) விண்டோஸ் 2003 இவைகளில் சில டைரக்டரிகளில் இந்த பைல் தென்படும். இது அந்தந்த போல்டர்களில் படங்கள் இருந்தால் அதனை தம்ப்நெயிலாக(Thumbnail) கேச் செய்து வைத்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டவை.

இதன் மூலம் விண்டோஸ் அந்த போல்டரில் உள்ள பைலின் தம்ப்நெயில் வியூவை எக்ஸ்புளோரரில் ஒவ்வொருமுறையும் அந்த பைலை படித்து பின் காட்டுவதற்கு பதிலாக இந்த பைல் முலம் உடனே காட்டுகிறது. விஸ்டாவில் இப்படி தனித்தனியாக அந்தந்த போல்டரில் இல்லாமல் மொத்தமாக ஒரே பைலாக சிஸ்டம் போல்டரில் சேமித்து வைக்கப்படுகிறது.

இந்த பைலின் ஒரே பிரச்சினை வன்தட்டில் சிறிது இடத்தை எடுத்து கொள்வதே. இது மிகச்சிறிய அளவே ஆனாலும், நிறைய போல்டர்களில் இருப்பதை கணக்கிட்டால் ஒரளவு இடம் எடுத்திருப்பது தெரியவரும். இதனை குறைந்த வன்தட்டு இடம் கொண்டிருப்பவர்கள் நீக்க நினைத்தால் கீழே உள்ளதை செய்து பாருங்கள்.

முதலில் thumbs.db வருவதை தடுக்க


1) மை கம்ப்யூட்டடை கிளிக் செய்து அதில்

2) டூல்ஸ் என்பதை மெனுவில் தேர்ந்தெடுத்து

3) அதில் போல்டர் ஆப்சன் என்பதை சொடுக்கி

4) அதில் வியூ டேப் என்பதில்

5) “Do not cache thumbnails” என்பதை செக் செய்ய வேண்டும்.

6) பின்னர் ஒ.கே கொடுத்து

7) மை கம்ப்யூட்டரை கிளிக் செய்ய வேண்டும்.

ஏற்கெனவே உருவாக்கப்ப்ட்ட அனைத்தையும் நீக்க

1) ஸ்டார்ட் மெனு சென்று

2) அங்கு உள்ள சேர்ச் என்பதை கிளிக் செய்து

3) பின்வருவதில் All Files and Folders என்பதை தெரிவு செய்து

4) “all or part of the file name” என்பதில் thumbs.db என்று டைப் செய்து

5) Look in box, ல் Local Hard Drives என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

6) தேடலை ஆரம்பித்த பின் ஒரு பெரிய லிஸ்ட் வரும்

7) எடிட் மெனுவில் உள்ள செலக்ட் ஆல் பைல் என்பதை கிளிக் செய்து

8) பின்னர் பைல் என்பதில் டெலிட் கமண்ட்டை அழுத்தி, எல்லாவற்றையும் நீக்க வேண்டும்.

9) பின்னர் சேர்ச் விண்டோவை மூடி விடலாம்

அன்புடன்
கண்ணன்

No comments:

Post a Comment