ykannan: January 2011

Tuesday, January 4, 2011

4000 வருடங்கள் வாழும் தாவரம்



கீழ் உள்ள படத்தில் காணப்படும் தாவரம் உலகின் மிகப்பெரிய மற்றும் மிக அதிகாலம் உயிர்வாழும் உயிரியாக இது கருதப்படுகிறது.


இதன் பெயர் Redwood Tree ஆகும். இது கலிபோர்னிய காடுகளில் காணப்படுகிறது. இதன் தண்டு செங்கபில நிறமானது. இவை என்றும் பசுமையானது.







கம்பீரமாக வளரும் இத்தாவரம் 24 மீற்றர் சுற்றளவை கொண்டுள்ளது. 120 மீற்றர் உயரத்தையும் உடைய இத்தாவரம் 2400-4000 வருடங்கள் உயிர்வாழ்வதாக ஆய்வுகளினால் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் எடை சராசரியாக 2000 தொன் என கணிக்கப்பட்டுள்ளது.



அன்புடன்

கண்ணன்

கம்ப்யூட்டர் வேகத்தை 20 மடங்கு அதிகரிக்கும் 'சிப்' கண்டுபிடிப்பு

நாம் இப்போது பயன்படுத்தும் வெர்சன் கம்ப்யூட்டர் வேகத்தை மிகபல மடங்கு அதிகரிக்கும் தொழில் நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினார்கள்.

அவர்கள் புதிய “சிப்” ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் கம்ப்யூட்டரைஅதிவேகமாக செயல்பட வைக்க முடியும். பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ளபிராசசர் மைக்ரோ “சிப்” பில் பொதுவாக 2 அல்லது 4 பாகங்கள் இருக்கும் சிலசிப்”களில் 16 பாகங்கள் வரை இருக்கும்.

இப்போது விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள மைக்ரோ “சிப்”பில் 1000 பாகங்களைஉருவாக்க முடியும். இதனால் இந்த கம்ப்யூட்டர் தற்போதைய கம்ப்யூட்டரை விடமடங்கு வேகமாக வேலை செய்யும். இது பெர்சனல் கம்ப்யூட்டராகஇருந்தாலும் அதிநவீன கம்ப்யூட்டரை விட சக்தி வாய்ந்ததாக இருக்கும். 20

இந்த கம்யூட்டர் இன்னும் சில வருடங்களில் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்றுவிஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.


அன்புடன்

கண்ணன்


ஒரு மொனிட்டரில் நான்கு கணினிகளை இணைப்பது எப்படி?





உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் இருந்தால் அவற்றை ஒரு மொனிட்டரில் இணைத்து ஒரே கீபோட் மற்றும் மவுஸ் கொண்டு இயக்கலாம்.

இதற்கென தனியாக மென்பொருள்களை நிறுவ வேண்டிய அவசியமில்லை. ரூட்டர் (Router) சாதனம் போன்ற அமைப்பிலான KVM switch எனும் ஒரு சிறிய வன்பொருள் சாதனம் மட்டுமே இதற்கு அவசியம். இங்கு KVM என்பது Keyboard, Video (monitor), Mouse என்பதனைக் குறிக்கிறது. அதாவது கேவியெம் சுவிச் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளை ஒரே கீபோட், மொனிட்டர் மற்றும் மவுஸ் கொண்டு இயக்க முடிகிறது. ரூட்டரில் காணப்படும் நெட்வர்க் போட்டுக்குப் பதிலாக இந்த கேவியெம் சுவிச்சில் VGA (Port) போர்டுடன் PS2 அல்லது USB போர்ட் மட்டுமே காணப்படும். அத்தோடு அதை இயக்குவதற்கான மின் சக்தியை தனியாக வழங்க வேண்டிய அவசியமுமில்லை. அதனுடன் இணைக்கப்படும் கேபல்கள் மூலம் கணியிலிருந்தே மின்சக்தியைப் பெற்றுக் கொள்ளும்.

ஒரே மொனிடரில் ஒன்றுக்கு மேற்பட கணினிகளை இணைத்துப் பணியாற்றும் அமைப்பு அனேகமாக அதிக எண்ணிக்கையிலான சேர்வர் கணினிகள் பயன்படுத்தப்படும் கணினி வலையமைப்புகளில் காணலாம். கணினி வலையமைப்புகளிலுள்ள நெட்வர்க சேர்வர்களை (Network Server) நிர்வகிப்பதற்கே இந்த கேவியெம் சுவிச் பயன் படுத்தப்படுகிறது. ஒவ்வொரு சேர்வருக்கும் தனியாக மொனிட்டர் கீபோர்ட் மற்றும் மவுஸ்களைப் பொருத்துவது அவசியமில்லாத ஒரு விடயம். ஏனெனில் சேர்வர் கணினியுடன் நேரடியான பயனர் தொடர்பு அரிதாகவே நடைபெறும். ஒரு சேர்வரை அணுக அந்த சேர்வர் கணினியிலுள்ள கீபோர்ட் மவுஸைப் பயன் படுத்த வேண்டிய தேவையிராது. கேவியெம் சுவிச்சுகளைப் பயன் படுத்துவதன் மூலம் சேர்வர் கணினிகளை இல்குவாக ஒரே இடத்திலிருந்து நிர்வகிக்க முடிவதோடு செலவினங்ளைகயும் குறைக்க முடிகிறது.

பொதுவான பாவனைக்கென வரும் கேவியெம் சுவிச் இரண்டு முதல் நான்கு கணினிகளை இணைக்கக் கூடியவாறு த்யாரிக்கப்படுகின்றன. மாறாக பெரிய கணினி வலையமைப்புக்களில் பயன் படுத்துவதற்கென 2 முதல் 64 கணினிகள் பொருத்தக் கூடிவாறான `கேவியெம் சுவிச்சுகள் பாவனையிலுள்ளன.

நான்கு கணினிகளை இணைக்கக் கூடிய கேவியெம் சுவிச்சில் நான்கு VGA போர்டுகளும் எட்டு PS2 அல்லது USB போர்டுகளும் காணப்படும். இந்த நான்கு VGA போர்டிலும் நான்கு கணினிகளிலிருந்து வெளியேறும் வீடியோ கேபல்கள் பொருத்தப்படும். அதே போன்று நான்கு கணினிகளிலிருந்து வெளியேறும் கீபோர்ட் மற்றும் மவுஸ் கேபல்கள் எட்டு PS2 அல்லது USB போர்டுகளில் இணைக்கப்படும். அதற்கென விசேட கேபல்கள் தனியாக வாங்க வேண்டிய அவசியமில்லை. . கேவியெம் சுவிச்சுடனேயே அவை தரப்படும்.

எனினும் நான்கு கணினிகளிலிருந்து வரும் வீடியோ காட்சிகளும் மொனிட்டரில் ஒரே நேரத்தில் தோன்றாது. நீங்கள் விரும்பும் கணினியிலிருந்து வரும் வீடியோ வெளியீட்டை கேவியெம் ஸ்விச்சின் மேற்பகுதியில் உள்ள சிறிய பட்டனை மீண்டும் மீண்டும் அழுத்துவதன் மூலம் பெறலாம். புதிதாக வரும் கேவியெம் சுவிச்சுகளில் கணினிக்கு கணினி மாறுவதற்கு கீபோர்டையும் பயன் படுத்த முடிகிறது. .

இரண்டு கணினிகளை ஒரே நேரத்தில் பயன் படுத்த் வேண்டிய சூழ் நிலைகளிலும் புதிதாக மொனிட்டர் வாங்குவதற்கு அதிகம் செலவாகும் எனும் நிலையிலும் இந்த கேவியெம் ஸ்விச்சை வாங்கிப்பொருத்தலாம்.

அன்புடன்

கண்ணன்