ykannan: இன்றைய கால தாம்பத்திய வாழ்க்கை.

Thursday, December 9, 2010

இன்றைய கால தாம்பத்திய வாழ்க்கை.



தாம்பத்யம் மனித வாழ்க்கையில் இன்றியமையாதது. காதல், திருமணம், தாம்பத்யம் இவை நம்மால் நமக்காக உருவாக்கப்பட்டது. இதனால் கிடைக்கும் நன்மைகள் நிறைய ஆனால் இரண்டு மனங்கள் இணைந்து புரிந்து கொள்ளும் போது தான் இது உண்மையாகிறது.

தாம்பத்யத்தின் மூலமாக இருவரது உணர்வு, மகிழ்ச்சி, துக்கம் அனைத்தும் பகிரபப்டுகிறது. இருவரும் மனம் விட்டு பேசும் போது தான் தாழ்வு மனப்பான்மை, கோபங்கள், தவறுகள் இவை அனைத்தும் தாம்பத்தயத்தினால் மறந்து மணக்கிறது வாழ்வும் சிறக்கிறது.

தாம்பத்யம் எங்கு முழுமையடையவில்லையோ அங்கு விரிசல் ஆரம்பமாகிறது. இன்றைய வேகமான கால கட்டத்தில் கணவன் மனைவியிடம் தாம்பத்யம் எந்த இடத்தில் உள்ளது என்றால் 75 சதவீதம் பேர் சொல்லும் காரணம் அதற்கு எங்க நேரம்?

இது ஆரோக்கியமான தாம்பத்யமா என்றால் நிச்சயம் இல்லை இவர்களெல்லாம் கடமைக்காக வாழ்பவர்கள்.

இன்றைய நிலையில் பெயர், பணம், புகழைத் தேடி தான் ஓடவேண்டிய நிலையில் இருக்கிறோம் மனம் விட்டு பேச நேரம் இல்லை. அப்படியே நேரம் கிடைத்தாலும் வேலை அலுப்பு, பொழுது போக்கு மையங்கள், தொலைக்காட்சி, குழந்தைகள் என நேரம் சென்று விடுகின்றது.

நம் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள், உறவினர்கள், உடன் அலுவலகத்தில் பணி புரிபவர்கள் என்று அவர்களைப் பற்றி அறியாமல் இருந்தால் தவறில்லை. ஆனால் தம் வீட்டில் என்ன நடக்கின்றது என்று பல பேருக்கு தெரிவதில்லை. காலையில் பணிக்கு செல்வதும் இரவு வீட்டுக்கு வரும் நேரம் தெரியாமல் தான் இங்கு அநேகம் பேர் உழைக்கின்றனர்.

நம் வீட்டுக்குத்தான் உழைக்கிறார்கள் என்றாலும் குழந்தைகளுடன் விளையாடவும், மனைவியுடன் நேரத்தை செலவழிக்கவும் முடியவில்லை இது போன்ற அருமையான நேரங்கள் என்ன சம்பாரிச்சு செலவு செய்தாலும் கிடைக்காது என்பதை உணர்வதில்லை.

இன்றைய வேகமான கால கட்டத்தில் மனிதன் வாழ்க்கை சக்கரம் போல் ஆகிவிட்டது. எந்த இடத்திலம் நிற்க கூட நேரமில்லை. அவர்கள் விரும்பும் பல நல்ல விசயங்கள் அவர்கள் இழக்கின்றனர். இதில் முக்கியமான ஒன்று தாம்பத்யம். இது கவலையான விசயம் இதற்கு மாற்றுக்கருத்து இல்லை என்றும் கூறலாம்.

இருவரும் வேலைக்குச் செல்வது இன்று சாதாரணம் அப்போது தான் குடும்பம் நடத்த முடியும் இது இன்றைய காலத்தின் கட்டாயம். இருவரும் இரவு பகல் பாராமல் இங்கு உழைப்பது சர்வசாதாரணம். இதன் பலன் பணம், சொகுசான வாழ்க்கை, இன்ப சுற்றலா, வார இறுதியில் பெரிய விடுதியில் உணவு, என்ன வேண்டுமா அது உடனே வாங்கலாம் ஆனால் இது மட்டும் தான் வாழ்க்கை என்று ஆகிவிட்டது. ஆனால் தாம்பத்ய வாழ்க்கை ? எத்தனை செலவு செய்தாலும் தாம்பயத்ய வாழ்க்கைக்கு ஈடாகுமா?

இன்று நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்கு அதிகரித்து வருவதும், திருமணம் ஆன சில மாதங்களிலேயே பிரிவற்கு முக்கிய காரணம் தாம்பத்தியமே என பல ஆய்வுகள் கூறுகின்றன. ஒருவர் வாழ்க்கையில் முன்னேறுவதற்க அவரது மனமும், உடலும் உற்சாகமாக இருக்க வேண்டிது மிக அவசியம். மனதிற்கும், உடலுக்கும் உற்சாகமளிக்கும் தாம்பத்யத்தை இன்று பலர் மறந்து விட்டனர் அதற்கு அவர்கள் செர்ல்லும் காரணம் நேரமில்லை. ஆனால் பின்வரும் நாட்களில் நீதிமன்றங்களை நாடும் போது மட்டும் நேரம் இருக்கிறது.நீதிமன்றத்தில் விவாகரத்துக்காக நிற்கும் நேரத்தில் மனம் விட்டு பேசியிருந்தால் இன்று பல குடும்பங்கள் இணைந்து இருக்கும்.

பணம், புகழ் என்று வாழ்க்கையில் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டு இருப்பார்கள் அவர்கள் அனைத்தையும் சம்பாரித்து நின்று பார்க்கும் போது பணத்தை தவிர அங்கு வேற ஒன்றும் இருக்காது. இவர்கள் பணம் இருந்தும் நிம்மதியை தேடி மீண்டும் ஓட வேண்டி இருக்கும்.

இருவரும் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தும் தாம்பத்யம் இல்லாமல், அவர்களுக்கு தெரியமலேயே அவர்களது நம்பிக்கை இழக்கின்றனர். தங்களது நிறை குறை, இன்பம் துன்பம், கோபங்களை தனது துணையுடன் இணைந்து அதற்காக நேரம் ஒதுக்கி துணையுடன் செலவிடுவது தான் நல்ல தாம்பத்யம். நல்ல தாம்பத்யம் தான் குழந்தைகள், செல்வம் என் வீட்டிற்குள் வாழ இயலும். மனித வாழ்க்கைக்கு தாம்பத்யம் அவசியம் அதை தொலைத்து விட்டால் அப்புறம் எதைத் தேடுவது.

அன்புடன்

கண்ணன்

No comments:

Post a Comment