ykannan: ஆண்களிடம் பெண்களுக்கு பிடித்தது என்ன? II

Thursday, December 9, 2010

ஆண்களிடம் பெண்களுக்கு பிடித்தது என்ன? II

பெண்களுக்கு எப்படிப்பட்ட ஆண்களை பிடிக்கும் என்று பல கருத்து கணிப்புகள் நடத்தி உள்ளனர் ஒவ்வொன்றிற்கும் ஒரு நல்ல காரணம் இருக்கும்.. இந்த கால பெண்கள் எப்படிபட்ட ஆண்களை விரும்புகின்றனர். திருமணம் என்று வந்ததும் பெண்களின் கனவு அதிகமாகிறது. தனக்கு வரும் கணவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். இது வரவேற்கத்தக்க விசயம். இவர்கள் எதிர்பார்ப்பது சில...
1. பெண்கள் ஆண்களிடம் முதலில் எதிர்பார்பது மரியாதையைத்தான். மனைவி என்றால் தனக்கு அடிமைபோல சேவை செய்ய வந்தவள் என்ற எண்ணம் இன்றும் ஆண்கள் மத்தியில் நிலவுகிறது. பெண்களது கருத்துகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

2. பாராட்டு அவர்களை பாராட்ட பாரட்டத்தான் அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். உதாரணத்திற்கு மனைவி வைத்த குழம்பில் உப்பு இல்லை என்றாலும் நல்லா செய்திருக்கிறாய் என்ற பாராட்டும் போது பிடிக்கும்.

3. அவர்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல விசயத்தையும் ஊக்குவிக்க வேண்டும். கார் ஓட்ட பழகுகிறார்கள் என்றால் கிண்டல் அடிக்காமல் பக்குவமாக சொல்வதை விரும்புவார்கள்.

4.ஆண்களின் உடை, பேசும் பேச்சு போன்றவற்றில் அவர்களுக்கு பிடித்த மாதிரியே அனைத்தையும் பேச வேண்டும். பெண்கள் எந்த மாதிரியான விசயங்க பேச ஆரம்பிக்கிறார்களே அதைப்பற்றியான தெளிவான பார்வையில் இருக்க வேண்டும் ஆண்களின் பேச்சு.

5.சமயத்திற்கு ஏற்றபடி சாமர்த்தியமாக நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். சரியான வேளையில் சரியான வழிகளைச் சொல்லும் ஆண்களை பெண்கள் மெச்சுவார்கள்

6.பெண் என்றால் பொன் முட்டையிடும் வாத்து என்று ஆண்கள் நினைக்கிறார்கள். அவர்களின் தேவைக்காக நெருங்கி வருதல், வேண்டிய பணத்தை பெற்றுச் சென்று ஊதாரித்தனமாக செலவு பிடிக்காத ஒன்று.

7. மதுக்கு அடிமையாக உள்ள ஆண்களை வெறுக்கின்றனர் ஆனால் அளவாக சாப்பிடுங்கள் என்றும் சொல்பவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்து விட்டது.

8. அடிக்கும் ஆண்களை அறவே வெறுக்கிறார்கள். கூடவே திருப்பித் தாக்கவும் செய்வார்கள். மென்மையாக கண்டிப்பது அவர்களுக்கு பிடித்த விசயம்.

9. பெண்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும். புரிந்து கொள்ளும் ஆண்களை அதிகம் விரும்புகின்றனர்.

10.காதலிக்கும் போது எப்படி பெண்களிடம் உருகி உருகி பேசுகிறார்களோ அதே போல் திருமணத்திற்கு அப்புறமும் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

11.புத்திசாலி ஆண்களை ரொம்ப புடிக்கும்.

12. அழகான ஆண்களைத்தான் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. பெண்களுக்கு அழகு ஒரு பொருட்டல்ல.

ஆண்கள் எப்படி இருந்தாலும் ஒரு பெண்னுக்கு அவனை பிடித்து விட்டால் யார் என்ன சொன்னாலும் அவன் தான் கணவன் என்று முடிவு செய்து யாரையும் எதிர்க்க தயங்கமாட்டார்கள்...

அன்புடன்

கண்ணன்

No comments:

Post a Comment