ykannan: பெண்கள்
Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

Sunday, October 3, 2010

உலகிலயே உயரமான பெண்மணி யார் தெரியுமா?

பதின் நான்கு வயதான பிரேசிலியன் பெண்மணியே உலகிலயே உயரமான பெண்மணி ஆவார். அப் பெண்மணி பற்றிய சில தகவல்கள் உங்களுக்காக!

பெயர் : எளிசனி சில்வா (Elisany Silva)

பிறந்த தேதி : 27/09/1995

உயரம் : 206 cm (6 அடி ′9” அங்குலம் )


அப் பெண்மணியின் புகைப்படங்கள் சில



அன்புடன்


கண்ணன்

Wednesday, September 22, 2010

காதலிக்கு பிடித்தமானவராக இருக்க!

நீங்கள் காதலித்துக்கொண்டிருப்பவராக இருந்தால் உங்கள் காதலிக்குப் பிடித்தமானவராக நடந்துகொள்ள இதோ சில ஆலோசனைகள்.. (கொஞ்சம் ஓவரா தான் இருக்கு ஆனா வேற வழியில்ல.

1. அடிக்கடி அவர்களிடம் ஐ லவ் யூ சொல்லுங்கள்.

2. அவங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஒரு பாடலை ரிங்டோனா வச்சுக்கங்க.

3. எங்காவது வெளியூர் சென்றுவந்தால் எல்லாருக்கும் வாங்குவதுபோல பத்தோடு பதினொன்றாக இல்லாமல் அவர்களுக்கென ஸ்பெஷலாக ஏதாவது பரிசு வாங்கிவந்து கொடுங்கள்

4. இந்த டிரெஸ் உனக்கு ரொம்ப அழகா இருக்கு, நீ சிரிக்கிறது அழகாயிருக்கு, உனக்கிந்த ஹேர் ஸ்டைல் நல்லாயிருக்குனு பாக்கும்போதெல்லாம் எதையாவது சொல்லனும்

5. கேட்ட கேள்விக்கு மட்டுமோ அல்லது வெறும் ok என்று ஒற்றை வார்த்தையிலோ ரிப்ளை செய்தால் அவர்கள் கோபமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

6. கருத்துவேறுபாடு வந்து பேசாம இருந்தாங்கனா 'மிஸ் யூ' மெசெஜா வரிசையா அனுப்புங்க. அவங்க கோபத்தை குறைக்கும்.

7. போன் பேசும்போது சண்டை வந்தால் எக்காரணம் கொண்டும் நீங்களா கட் பண்ண கூடாது.. (அத அவங்க செய்யலாம்)

8. அவங்க கேக்கலனாலும் அப்பப்போ அவங்க போனுக்கு டாப்அப் பண்ணி விடுங்க.

9. சண்டை வந்ததுனா ஆண்கள் தான் இறங்கி வந்து தங்கள சமாதானப்படுத்தணும்னு பொண்ணுங்க நெனப்பாங்க..

10. ஏதாவது ஒரு டாபிக் அவர்களுக்கு பிடிக்கலனா அதுபற்றி பேசாதீங்க.

11. நீங்க சாப்பிட்றீங்களோ இல்லையோ, எவ்ளோ வேலை இருந்தாலும் 3 வேளையும் கரெக்ட்டா போன் (இல்லனா மெசெஜ்) பண்ணி சாப்டியா?னு அவங்கள கேளுங்க.

12. பொதுவா பெண்கள் கோபத்தையோ பிடிக்காததையோ வெளிப்படையா சொல்லமாட்டாங்க. ஆண்கள் தானாக புரிந்துகொள்ளனும்னு நெனப்பாங்க. அதுனால எதுனாலும் அவங்கள கலந்துகிட்டு முடிவெடுங்க.

13. அவங்க எங்கயாவது வெளில போனாங்கனா அவங்களுக்கு முன்னாடி அங்க போய் நில்லுங்க.. உன்ன பாக்கணும்போல இருந்தது, அதான் வந்தேனு சொல்லுங்க.

14. அடிக்கடி SMS பண்ணுங்க. குறிப்பா காலையில் எழுந்தவுடனேயும் தூங்கும் முன்னும் மறக்காம அனுப்புங்க.. (அதாவது உங்கள் நாளின் ஆரம்பமும் முடிவும் அவர்களுடன் தான் என்பதை உணர்த்துங்கள்)

15. எந்த சூழ்நிலையா இருந்தாலும் பாக்கவே முடியலைனாலும் தினமும் தூங்குறதுக்கு முன்னாடி ஒரு மணிநேரமாவது அவங்க கிட்ட மனசு விட்டுப் பேசுங்க.

16. அவங்களோட பிறந்தநாள், முதல் சந்திப்பு இப்படி முக்யமான நாளையெல்லாம் ஞாபகம் வச்சு சர்ப்ரைஸா கிப்ட் கொடுத்து அசத்துங்க. (அவங்களுக்கு ஞாபகத்துல இருந்தாலும் உங்களுக்கு நினைவிருக்கானு டெஸ்ட் பண்ணுவாங்க.. அதுனால ஜாக்கிரதை)

17. ரொமான்ஸா பேசுறோம்னு கண்டபடி எதையாவது உளறி, வளிஞ்சு சொதப்பிடாதீங்க.. டீசன்ட்டா அப்ரோச் பண்ணுங்க.

18. ஏற்கனவே தெரிந்த விசயமானாலும் 'அதுதான் எனக்குத் தெரியுமே'னு அசட்டை செய்யாதீர்கள். ஆர்வமாய் அவர்கள் பேச்சை கேளுங்க.

19. அவர்களது தோழிகளிடம் பேசும்போது அளவோடு பேசுங்கள். இதுவே பெரும்பாலான சண்டைக்கு வழிவகுக்கும். கவனம் தேவை..

20. இன்டர்நெட்டிலோ மொபைலிலோ சாட் பண்ணும்போது வேறு புதிய பெண் அறிமுகமானால் கவனமாகப் பேசுங்கள். அது உங்கள் காதலியாகவே கூட இருக்கலாம்.
உங்களை சோதிக்கும் முயற்சியாக இருக்கும்.

21. அவர்களுக்கு ஏதாவது தனித் திறமையிருந்தால் (உங்களுக்குப் பிடிக்கலனாலும்) அதனைப் பாராட்டுங்கள்.

22. அவர்களிடம் பேசும்போது அதிகாரமோ அட்வைஸோ செய்து அறுக்காமல் கொஞ்சலும் கெஞ்சலுமாகப் பேசுங்கள்.

23. அவர்களை ஏதாவது ஒரு செல்லப்பெயர் வைத்து அழையுங்கள்

24. உனக்காக நானிருக்கிறேன் என்றும், நீயில்லாமல் என்னால் இருக்க முடியாது என்றும் அவர்களது உள்ளங்கை பிடித்து அடிக்கடி நம்பிக்கையுடன் சொல்லுங்கள்.

இதெல்லாம் செய்தாலும் அவங்க உங்கள புரிஞ்சுக்கலனா அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது, கடவுள் தான் உங்கள காப்பாத்தனும்.

அன்புடன்

கண்ணன்

Tuesday, September 21, 2010

பெண்களைக் கவர சில டிப்ஸ்

”நானும் என்னென்னவோ பண்ணிப் பாக்குறேன். அந்த ஃபிகர் என்ன திரும்பிப் பாக்கவே மாட்டிங்குதுடா மச்சான்.. ”

இது பெரும்பாலான இன்றைய ஆண்களின் கவலையாக உள்ளது.. (நாட்டுக்கு ரொம்ப தேவ தான்)

பெண்களை கவர்வது பற்றி ஆண்களிடம் நிறையவே குழப்பங்கள் இருக்கு. ”பொண்ணுங்கள புருஞ்சிக்கவே முடில” ”அந்த ஃபிகர் நல்லாயில்ல மச்சான்” அப்டி இப்டினு ஏதேதோ சொல்லி தங்கள தாங்களே சமாதானப்படுத்திக்குவாங்க. (தொப்பி வாங்கினாலும் காட்டிக்கிறதில்ல)

இதோ உங்களுக்காக சில டிப்ஸ் !

1. ஆக்டிவா இருக்கணும்

மந்துனு எதையோ பறிகொடுத்த மாதிரி சோகமா இருக்காம எப்பவுமே துறு துறனு சுறுசுறுப்பா இருக்குற ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கும். (வெட்டியா இருந்தாலும் பிஸி“னு சொல்லுவோம்ல.. அதுமாதிரி. அதுக்காக அவங்க பக்கத்துல நின்னா கூட கண்டுக்காம ஓவரா பண்ண கூடாது)

2. ஸ்மைலிங் ஃபேஸ்

என்ன தான் டென்சனா இருந்தாலும் அத முகத்தில காட்டாம சாந்தமா ஸ்மைலிங் ஃபேஸா இருக்கணும். (அதுக்காக அவங்க டென்சனா மூட் அவுட்டா இருக்கும்போது கேனத்தனமா சிரிச்சுகிட்டு இருக்கக் கூடாது.)

3. ஓவர் ஆக்‌ஷன் உடம்புக்கு ஆகாது

ஃபிகர் இருக்குதுனு ஓவரா பந்தா பண்ணிகிட்டு இருக்க கூடாது. முக்கியமா தற்பெருமை ரொம்ப பேச கூடாது. நான், என் ஃப்ரண்ஸ், எங்க அம்மா அப்டி இப்டினு சுயபுராணம் பாட்றவன கண்டாலே பொண்ணுங்களுக்கு சுத்தமா பிடிக்காது. அவங்களா கேட்டா மட்டும் சொல்லுங்க போதும். அதே மாதிரி தேவையில்லாம சத்தமா பேசி அனாவசியமா சிரிக்கிறது, வளியிறதெல்லாம் கூடாது. (அதுக்காக சிரிப்பை அடக்குறேன் பேர்வழினு சொதப்பிடாதீங்க..)

4. உடைகள்

பொதுவா (ஆண்கள்) சாதாரணமா டிரஸ் பண்ணினாதான் பொண்ணுங்களுக்குப் பிடிக்கும். எங்கிட்டயும் உடை இருக்குனு காட்றதுக்காக உங்க உடம்புக்கும் உடைக்கும் சம்பந்தமில்லாம உடுத்த வேணாம். கேஷ்வலா டிரஸ் பண்ணுங்க. (ஆனா பொண்ணுங்க மட்டும் அலங்காரமா டிரஸ் பண்ணுவாங்க, நீங்க கேக்க கூடாது)

5. கண்கள்


ஒரு பொண்ணுகிட்ட பேசும்போது உங்க கண்கள் ரொம்பவே முக்கியம். உங்கள் பார்வை எப்படிப்பட்டது என்பதை வைத்துதான் உங்கள் கேரக்டரை அனுமானிப்பார்கள் பெண்கள். நேருக்கு நேராக முகம் பார்த்துப் பேசுவதையே பெரும்பாலான பெண்கள் விரும்புவார்கள். (இனியாவது பேசும்போது வேறு எங்கோ பார்ப்பது, தரையை நகத்தை செல்போனைப் பார்ப்பது எல்லாம் வேண்டாமே)

6. ஹேர் ஸ்டைல்

கண்டபடி ஹேர்கட் கலரிங் எல்லாம் பண்ணினால் நண்பர்கள் வேண்டுமானால் பாராட்டலாம்.. பெண்களுக்கு எரிச்சல் தான் வரும். சீரான ஹேர்கட், கண்ணை உறுத்தாத கலரிங் (அல்லது முடிந்தவரை கலரிங் பண்ணாமல்) இருந்தால் தான் அவர்களுக்கு பிடிக்கும். (ஒழுங்கா தலைக்கு எண்ணெய் தேய்டா பண்ணாட“னு அவங்க கத்துறது கேக்குதா?)

7. உடலமைப்பு

என்னதான் நீங்கள் குள்ளமாகவோ உயரமாகவோ இருந்தாலும் உடலை எவ்வாறு கட்டமைப்பாக வைத்துள்ளீர்கள் என்பதில் கவனம் தேவை. தொள தொள சதையும் தொப்பையுமாக இருக்கும்பட்சத்தில் ”அண்ணா” என்று ஒற்றை வரியில் அனைத்தையமே முடித்துவிடுவார்கள் பெண்கள்.. எப்போதும் உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ள முயலுங்கள். (அதுக்காக ஓவரா கை மசில்ஸை காட்டியபடி சட்டை போட்டுகிட்டே திரியாதீங்க)

சிகெரெட் சீக்ரெட்

சிகெரெட் பிடிக்கிற ஆண்களை பார்த்தால் ஸ்டைலாக இருப்பதாக ஒரு வதந்தி இருக்கும். பிடித்த ஆண்களை கூட வெறுக்க வைத்து விடும் இந்த சிகரெட்.. எனவே தூக்கிப் போடுங்கள் அந்த கண்றாவியை.(அவங்க போனதுக்கப்புறம் எடுத்துக்குவீங்க தானே.. )

இது எல்லாத்துக்கும் மேல எப்பவுமே நீங்க நீங்களா இருந்தாலே போதும்.. அடுத்தவங்களுக்காக செயற்கையா நடந்துக்காம இயல்பா இருந்தாலே பெண்களுக்குப் பிடிக்கும்.

அன்புடன்

கண்ணன்

Sunday, August 1, 2010

அழகுக்கு அழகு சேர்க்க:

அழகுக்கு அழகு சேர்க்க சரியான உணவுகளை நாம் தேர்ந்து எடுத்து உண்டாலே நாம் எத்துனை வயதிலும் இளமையாக இருக்கலாம். அழகை பராமரிக்க சில யோசனைகள்:


அழகிய கண்களுக்கு:

பெண்களுக்கு அழகே கண்கள் தான்..தினமும் காலை எழுந்தவுடன் சுத்தமான குளிர்ந்த தண்ணீரில் கண்களை அலசவும். கண்கள் புத்துணர்ச்சி பெரும். கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ அதிகம் உள்ள உனவுகளை சாப்பிடவும். கேரட், முட்டைக்கோஸ், பீட்ரூட், பால், பழங்கள்,கீரைகள், பப்பாளி போன்ற உணவுகளை அதிகமாக சேர்க்கவும். பேரீச்சபழம் தினமும் சாப்பிட்டால் கண் தெளிவு பெரும்


நீ சிரித்தால் சிரிப்பழகு:

சிரிக்கும் பொழுது முகத்துக்கு அழகு கூட்டுவது பற்கள் தான்.
பற்களில் எப்பொழுதும் பிளாக்யு என்ற மெல்லிய கிருமிகள் இருக்கும். இதனை தடுக்க தினமும் உணவு சாப்பிட்ட பின்பு வாயினை நன்றாக கொப்பளிக்கவும். இரண்டு முறை பல் துலக்கவும். இரவில் வெந்நீரில் உப்பு போட்டு வாய்கொப்பளிக்கவும். இதன் மூலம் பல்லின் இடுக்கில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும். அதிக சூடான உணவுகளோ அல்லது அதிக குளிர்ச்சியான உணவுகளையும் சாப்பிட வேண்டாம்.


நீ நடந்தால் நடை அழகு:

கால்களை சுத்தமான வெந்நீரில் உப்பு, எலுமிச்சை சாறு போட்டு முட்டி வரை நனையும் அளவுக்கு 10 நிமிடம் தண்ணீரில் வைக்கவும். சின்ன பிரெஷ் வைத்து விரல் நகங்களை அலசவும். பின்னர் மென்மையான துணியினை வைத்து துடைத்துவிட்டு கால்களுக்கு போடும் கிரீமை தடவி மென்மையாக மசாஜ் செய்யவும்


நெற்றியிலே சரிந்து விழும்
நீள முடி அழகு

நீண்ட கூந்தல் யாருக்கு தான் ஆசையில்லை. அதற்கு அடிக்கடி அன்னாசிப்பழம், ஆப்ப்ள், கோதுமை உணவு, கீரைவகைகள், தேன், வெள்ளரிக்காய் கறிவேப்பிலை பொடி ஆகியவற்றை உணவில் அதிகமாக சேர்க்கவும். தினமும் பெண்கள் தலையினை வாரி பூ வைத்தால் அழகு கூந்தல் இன்னும் அழகாக இருக்கும்.
அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல் அழகு:
சிலருக்கு கை முட்டிகள் சொரசொரப்பாக இருக்கும் அதனை போக்க கோதுமை மாவு 1ஸ்பூன்,பால் ஏடு அல்லது எலுமிச்சை ஜீஸ் கலந்து முட்டிகளில் தேய்த்து 15நிமிடம் கழித்து அலசினால் சொரசொரப்பு மாறி பளிச்சுனு இருக்கும்॥சீனி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து ஸ்கிரப்பரால் உடல் முழுவதும் தேய்த்தால் கைகள், உடல்கள் மென்மையாகும்।இரவில் ஆலீவ் ஆயில் கைகளுக்கு தேய்து பாடுப்பதாலும் மென்மையாகும்।
நகங்கள் உறுதியாகஇரவில் விரல் மற்றும் நகத்தில் சிறிது வென்நெய் தடவவும்,விரல் நகங்கள் உறுதியாக இருப்பதற்கு வெந்நீரில் எலுமிச்சைச் சாற்றில் நகங்களை நனையுமாறு 15 நிமிடம் வைக்க வேண்டும்.நகங்களும் உறுதியாகவும் இருக்கும் ।சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசைவதால் விரல்களுக்கு நல்ல பயிற்சி। கோதுமை மாவினால் கைகள் இன்னும் மிருதுவாகும்

அன்புடன்

கண்ணன்

World's Most Flexible Women's அட்டகாசமான புகைப்படங்கள்

















அன்புடன்

கண்ணன்

Saturday, July 3, 2010

பெண்களுக்கான உடை அழகு டிப்ஸ்!

உடை என்பது அனைவருக்கும் முக்கியமான ஒரு விஷயம். அதை நாம் எந்த விதத்தில் பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து நம் மீதான வசீகரத்தை கூட்ட முடியும். இது ஆண்கள் பெண்கள் இருவருக்குமே பொருந்தும் என்றாலும் இந்த முறை பெண்களுக்காக இதை கூறுகிறேன். இது வரை எழுதிய இடுகைகள் எதிலும் அவர்களுக்கு என்று தனியாக எதையும் எழுதியதில்லை, எனவே அதற்காக

உடை விசயத்தில் முக்கியமான ஒன்று அனைவரும் நம் உடல்வாகிற்கு எது பொருந்துமோ அந்த வகையான உடைகளையே தேர்வு செய்ய வேண்டும். ஆசைப்படுகிறோம் என்பதற்காக பொருத்தமில்லாத உடைகளை அணிந்து மற்றவர்கள் கிண்டலடிக்கும் படி நடந்து கொள்ளக்கூடாது.

சரியான உடைகளை தேர்வு செய்வதன் மூலம் நம்மிடம் உள்ள மைனஸ்களை பிளஸ்களாக மாற்றலாம். எடுத்துக்காட்டாக குண்டாக மற்றும் குள்ளமாக இருப்பவர்கள்,ரொம்ப ஒல்லியா இருப்பவர்கள், எனக்கு நல்ல ஸ்ட்ரக்சர் இருக்குங்க ஆனா பார்த்தால் ஸ்மார்ட்டா செக்ஸியா இல்லைன்னு நினைக்கிறவங்க இவங்க எல்லோருமே இந்த பிரச்னையை முழுவதும் இல்லை என்றாலும் ஓரளவு சரி செய்யலாம்.

முதலில் குண்டாக இருப்பவர்கள்

இவர்களுக்கு தாங்க இருப்பதிலேயே ரொம்ப சிரமம், எந்த உடை அணிந்தாலும் திருப்தி இல்லாமலே இருப்பாங்க, அதற்க்கு காரணம் தங்கள் அதிகப்படியான சதைகள் தான். உடற்பயிற்சி அது இதெல்லாம் இருந்தாலும் நாம் உடையின் மூலம் எவ்வாறு ஓரளவு சரி செய்யலாம் என்று பார்ப்போம்.

குண்டாக இருப்பவர்கள் கண்டிப்பாக ரொம்ப வழுவழுப்பான உடைகளை தேர்வு செய்யவே கூடாது, காரணம் அவ்வகையான உடைகள் உடலோடு ஒட்டி உடல் பாகங்களை வெளிப்படையாக காட்டும். குறிப்பாக மார்பு, இடுப்பு மற்றும் பின்புறம், இது பார்ப்பவர்களுக்கு ஒரு வெறுப்பையே தரும். இவ்வைகையான ஆடைகளை முற்றிலும் தவிர்த்து விடுதல் நலம், இல்லைங்க எனக்கு இந்த மாதிரி துணி தான் பிடிக்கும் என்றால் இருப்பதிலேயே குறைந்த அளவு வழுவழுப்பான உடைகளை தேர்வு செய்யுங்கள். காட்டன் வகை உடைகள் சிறந்தது. ஏங்க! எனக்கு என்ன வயசா ஆகிடுச்சு! காட்டன் புடவை எல்லாம் கட்ட!! என்றால் காட்டன் புடவைகளிலேயே பல வகை உண்டு என்பது உங்களுக்கு தெரியும், எனவே அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம்.

குள்ளமாக குண்டாக இருப்பவர்கள்

இவர்களும் வழுவழுப்பான உடைகளை கண்டிப்பாக தவிர்த்தே ஆக வேண்டும் வேறு வழியே இல்லை. இவ்வகை உடைகள் இன்னும் உயரம் குறைந்தவர்களாக காட்டும். பெண்களுக்கு மிக முக்கியமான அம்சம் குறிப்பாக குள்ளமாக இருப்பவர்களுக்கு ஷோல்டர் அகலமாக இருப்பது, உங்கள் ஷோல்டர் அகலமாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு சிலரை பார்த்தால் அவர்களுக்கு ஷோல்டர் அகலம் குறைவாக இருக்கும், அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி காட்டன் புடவைகள் தான் இவைகள் தான் உங்கள் சோல்டரை மறைத்து அகலப்படுத்தி காட்டும், அதோடு காட்டன் புடவை என்பதால் சதை பகுதிகளை அப்பட்டமாக காட்டாது.

பெண்கள் சுடிதார் அணியும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் தொள தொளன்னு அணியக் கூடாது குறிப்பாக குள்ளமாக குண்டாக உள்ளவர்கள், அதே போல ரொம்ப இறுக்கமாகவும். இடுப்பு பகுதியில் அளவு குறைத்து ஓரளவாவது ஸ்ட்ரக்சர் கொண்டு வரும் படி இருக்க வேண்டும். ரொம்ப இறுக்கமாகவும் இருந்தால் பின்புறம் அசிங்கமாக தெரியும். எனவே இடை பகுதியில் கவனமெடுத்து சுடிதார் அணிய வேண்டும்.
ஒல்லியாக உள்ளவர்கள் ரொம்ப மெல்லிய உடையை தவிர்க்க வேண்டும், இவை உடலை குச்சி குச்சியாக காட்டும். எலும்புகள் துருத்திக்கொண்டு அசிங்கமாக இருக்கும். சுடிதார் அணியும் போது கையின் அளவு ரொம்ப குறைவாக வைக்க கூடாது. இது உங்களின் நீண்ட கைகளை (ஒல்லியாக இருப்பதால்) இன்னும் நீண்டதாக காட்டும். தேர்வு செய்யும் உடை திக்கான உடையாக பார்த்துக்கொள்வது நல்லது.

நான் குண்டும் இல்ல ஒல்லியுமில்ல குள்ளமும் இல்ல பர்ஃபெக்ட்டான ஸ்ட்ரக்சர் இருந்தாலும் ஸ்மார்ட்டாக தெரியலை என்று வருத்தப்படுகிறீர்களா! இதற்கெல்லாம் காரணம் உடை மட்டுமே. ஏனோ தானோவென்று உடை அணிவதாலே அவ்வாறு தெரிகிறீர்கள். இதற்க்கும் உங்கள் முக அழகிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கறுப்பாக மாநிறமாக இருப்பவர்கள் ப்ரைட்டான உடைகள் தேர்வு செய்வது நலம். நீங்கள் பேன்ட் அணிபவராக இருந்தால் பெண்களுக்கு என்றே தற்போது பல ப்ரேண்ட்களில் அலுவலக உடை வெளியிட்டு உள்ளார்கள், நீங்கள் அதை பயன்படுத்தலாம். பேன்ட் மற்றும் வழுவழுப்பான சட்டை தான் தற்போதைய ஃபேஷன், மாடர்னாகவும் அதே சமயம் கவர்ச்சியாகவும் இருக்கும். சுடிதார் அணிபவராக இருந்தால் சரியான ஃபிட் உள்ள இடுப்பளவு சின்னதாக உள்ள சுடிதாரை தான் தேர்வு செய்ய வேண்டும், லூசான உடைகளை அணியக்கூடாது.
நான் அலுவலகம் எல்லாம் போவதில்லை சுடிதாரும் போடுவதில்லை புடவை மட்டும் தாங்க கட்டுவேன் என்று சொல்கிறீர்களா! கவலையே படாதீங்க. உலகிலேயே டீசன்ட்டாகவும் அதே சமயம் செக்ஸியாகவும் உள்ள உடை என்றால் அது புடவை தான். நல்ல ஸ்ட்ரக்சர் உள்ளவர்களுக்கு எந்த புடவை வேண்டும் என்றாலும் கட்டலாம் அனைத்துமே சிறப்பாக இருக்கும்.


புடவை கட்டுவது பெரிய விஷயமில்லை அதை சரியான முறையில் கட்ட வேண்டும். என்னங்க நீங்க! எவ்வளவு வருசமாக புடவை கட்டுறேன் எனக்கு புடவை கட்டுறத பற்றி சொல்றீங்களே என்று கோபப்படாதீங்க. ஒரு சிலர் புடவையை ஃப்ளீட் ஒழுங்காக வைக்க மாட்டார்கள், கால் முழுவதும் மறையும் படி கட்ட மாட்டார்கள் தூக்கியபடி இருக்கும், பார்டர் சரியான பக்கத்தில் அளவில் இருக்க வேண்டும், முந்தானை நீளம் குறைவாக இருக்கும், கீழ் பகுதியில் ஃப்ளீட் சரியாக எடுத்து விடாமல் அசிங்கமாக இருக்கும், உடலை சுத்தி வைத்து கட்டியது போல இருக்க கூடாது இது மாதிரி நிறைய இருக்கு.

முக்கியமான விஷயம் பெண்களின் லோ ஹிப். பெரும்பாலும் இதை போல இப்போதைய பெண்கள் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அது அனைவருக்கும் நன்றாக இருக்காது. ஒரு சிலருக்கு மட்டுமே நன்றாக இருக்கும். இதை விலாவாரியாக விவரிக்க முடியாது என்பதால் நீங்களே புரிந்து கொள்ளுங்கள் செக்ஸியாக இருக்க வேண்டுமே தவிர ஆபாசமாகவோ அல்லது மற்றவர்கள் பார்த்து வேறு விதமாக கிண்டலடிக்கும் படியோ உடை அணியக்கூடாது. அதிகப்படியான லோ நெக் மற்றும் லோ ஹிப் அவ்வாறான தோற்றத்தை தந்து விடும். ஒரு சிலருக்கு அது அழகாக இருக்கலாம், ஆனால் அவர்கள் பெரும்பான்மையானவர்கள் கிடையாது.

அதே போல பெண்களுக்கே உள்ள எண்ணம் மிகவும் விலை உயர்வான ஆடையை அணிந்தால் மட்டுமே அழகாக தெரிவோம் என்று, இது முற்றிலும் தவறான எண்ணம். மிக குறைந்த விலைகளில் கூட அழகான புடவைகள் உள்ளது, எந்த உடையாக இருந்தாலும் நமக்கு பொருத்தமாக உள்ளதா என்று தான் பார்க்க வேண்டுமே தவிர, விலை உயர்ந்ததாக உள்ளதா என்று பார்க்க கூடாது.

நான் கூறிய எல்லாவற்றையும் விட மிக மிக மிக முக்கியமானது தன்னம்பிக்கையும், தாழ்வு மனப்பான்மை இல்லாமல் இருப்பதும் தான். ஒருவரை மிக அழகாக காட்டுவதில் மிக முக்கிய பங்காற்றுவது உடை தான், எனவே இப்படி எல்லாம் இருக்கிறோமே என்று வருத்தப்படாமல் உடைகளை உங்கள் உடல்வாகிற்கு தகுந்த மாதிரி மாற்றி அமைப்பதன் மூலம் நம்மிடம் உள்ள சில குறைகளை வெற்றி கொள்ள முடியும். இது வரை உங்களை கண்டு கொள்ளாமல் இருந்தவர்கள் நீ மட்டும் கொஞ்சம் கலராக இருந்து இருந்தா அல்லது எடை கூடி, குறைந்து இருந்தா இன்னும் நன்றாக இருக்கும் என்று சொல்லுபடி ஆகி விடும். அதே போல இன்னொரு முக்கியமான விஷயம் உடை விசயத்தில் நன்கு ஆர்வம் இருப்பவர்களால் மட்டும் தொடர்ந்து இதை பின் பற்ற முடியும், மற்றவர்கள் ஆசைக்கு ஒரு வாரம் இருந்து விட்டு வழக்கம் போல புலம்பி கொண்டு இருப்பார்கள். எந்த ஒரு செயலிலும் ஆர்வம் இருந்தால் மட்டுமே அது சிறப்பாக இருக்கும் என்பது அனைத்திற்கும் பொருந்தும் நம் உடை தேர்வு உட்பட.

அன்புடன்

கண்ணன்

மேல் நாட்டுக் கலாசாரம் தேவையா?

நான் பெண் அடிமை பற்றி பேசவில்லை மேல் நாட்டு நாகரீகம் பற்றித்தான் சொல்லி இருக்கின்றேன்.நான் முற்று முழுதாக பெண்களை அடிமைப் படுத்துவதை எதிர்ப்பவன். பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று சொல்பவன். நான் பெண் அடிமை பற்றிப் பேசுகிறேன் என்று சொல்பவர்கள் எனது பதிவுகளைப் பாருங்கள் புரியும்.

ஒரு இனமாகட்டும், சமுகமாகட்டும், மதமாகட்டும் சில நடைமுறைகள், பாரம்பரியங்கள், கலாசாரம் என்று இருக்கின்றது. அதற்கு ஏற்ற மாதிரி இருக்க வேண்டியது ஒவ்வொருவரது கடமை. எதற்காக இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைகள் நம்மை நல்வழிப்படுத்துவதற்காகவே. ஒவ்வொருவரும் தங்கள் விருப்பப்படி கட்டுக்கோப்பு இல்லாமல் இருந்தால் அது மிருகங்கள் போன்றுதான் இருக்கும்.

இன்று மேல் நாட்டு நாகரீகம் எங்களை ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கின்றது. நான் மேல் நாட்டு நாகரீகங்களை எதிர்க்கவில்லை. ஆனால் எமது கலாசாரம் பாரம்பரியங்களை சீர்குலைக்கும் மேல் நாட்டு நாகரீகங்களை எதிர்க்கிறேன். சில மேல் நாட்டு நாகரீகங்களை ஏற்றுக்கொள்ளலாம். அந்த நாகரிகத்தின் தாக்கத்தினைப் பற்றி சிந்தியுங்கள்.

அந்த இடுகையிலே நான் உடை பற்றிச் சொல்லி இருந்தேன். எந்த ஒரு சமூகமும் உடையினைக் குறை, அல்லது உடுத்த வேண்டாம் என்று சொல்லி இருக்கின்றதா இல்லையே. எதற்காக நாம் உடை அணிகின்றோம். அரைகுறை ஆடையுடன் அலைவதைவிட ஆடையின்றி திரியலாமே. சுதந்திரம் இருக்கிறதுதான் சுதந்திரம் இருக்கின்றது என்று சமூகக் கட்டமைப்பை மீறி ஆடையின்றி போக முடியுமா.


நாகரீக ஆடைகளை நாகரீக உலகுக்கு தகுந்தாற்போல் அணிய வேண்டும் . நான் இல்லை என்று சொல்லவில்லை. அரைகுறை ஆடை வேண்டாம் என்றுதான் சொன்னேன். இந்த அரை குறை ஆடையினால் எத்தனை பிரட்சனை. அவர்களை பார்த்து யாராவது ஆண்கள் ஏதும் சொல்லிவிட்டால் ஆண்கள் மீது குற்றம் சுமத்தி விடுவார்கள். யார் மீது குற்றம் அரை குறை ஆடை இன்றி தமிழ் கலாசார ஆடை அணிந்து செல்கின்ற பெண்களுக்கு ஆண்கள் அளவுக்கு அதிகமான தொல்லைகொடுக்கின்றார்களா . இல்லையே, அரை குறை ஆடை அணிபவர்களிடம் கேட்கின்றேன் நீங்கள் அணிந்திருப்பது எதற்கு அதனையும் அகற்றி விடலாமே.

பெண்களை மட்டும் நான் குற்றம் சொல்லவில்லை இன்று இளைஞர்களும் வெளிநாட்டு நாகரீக மோகத்தினால் தானும் சீரழிந்து தனது சமுகத்தையும் சீரழிக்கின்றனர். போதைப்பொருள் பாவனை இன்று எந்தளவு அதிகரித்து இருக்கின்றது. இதனால் அவர்கள் மட்டுமா இந்தச் சமூகமுமே பாதிக்கப் படுகிறது. இது தேவையா?.

இப்படிப்பட்ட வெளிநாட்டுக் கலாசாரங்களைத்தான் நான் எதிர்க்கிறேன். ஆனால் சில மேல் நாட்டுக் கலாசாரங்களை நாம் அறிந்திருக்க வேண்டும் பின்பற்ற வேண்டும். நான் இல்லை என்று சொல்லவில்லை. இன்று மேல் நாட்டுக் கலாசாரம் ஏதோ ஒரு வகையில் அவசியமாகிவிட்டது. அதற்காக வேண்டப்படாத மேல் நாட்டு கலாசாரங்களை பின்பற்றுவதை கைவிடுங்கள் என்பதுதான் என் கருத்து.

இதனை பெண் அடிமை பேசுகிறேன் என்று சொல்லவேண்டாம். என்ன சொல்கிறேன் என்பதனை புரிந்து கொண்டு விவாதியுங்கள்.
இதுபோன்ற தேவையற்ற மேல் நாட்டுக் கலாசாரங்கள் தேவையா என்பதுதான் என் கேள்வி உங்கள் கருத்துக்கள் பின்னூட்டங்களாக வாரட்டுமே...

உங்கள் விவாதங்கள் வெறுமனே பொழுது போக்குக்கான விவாதமாக இல்லாமல் மாற்றுக் கருத்துக்களுக்கு தீர்வு கிடைக்கின்ற விவாதங்களாக அமையட்டும்.

அன்புடன்

கண்ணன்

Friday, July 2, 2010

தாலிக்கு அர்த்தம் என்ன?

திருமணம் முடிந்த பெண்களை நம்மாள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும் அவர்கள் அணிந்திருக்கும் மங்களகரமான மஞ்சல் கயிறு (அது தான் தாலி) அதை உறுதிப்படுத்திவிடும், அது என்ன பெண்களுக்கு மட்டும் அடையாளமாக தாலி அப்ப ஆண்களுக்கு இல்லையா? முன்பெல்லாம் ஆண்கள் அவர்களின் கால் விரல்களில் பெண்கள் அணியும் மிஞ்சி (சரியான தமிழ் பெயர் தெரியவில்லை) போல அணிவார்களாம் ஆனால் அது எப்படி நாளடைவில் இல்லாமல் போனது பற்றி போதிய தகவல்கள் இல்லை அதனால் அதை விட்டுவிடுவோம் சரி பெண்கள் மட்டும் கழுத்தில் திருமணம் முடிந்ததன் அடையாளமாக கழுத்தில் தாலி அணிகிறார்கள் ஆண்களும் காலில் மிஞ்சி அணிவதற்கு பதிலாக வேறு ஏதாவது கழுத்தில் அடையாளமாக அணிந்திருக்கலாமே என கேள்வி கேப்பவர்களுக்காக பெண்கள் பொதுவாகவே (பழங்காலத்து பெண்கள்) தரையை பார்த்துதான் நடக்கிறார்கள் (இப்பொழுதுதான் இருவரும் சரிசம்மாகிவிட்டோமே) அதனால் அவர்கள் திருமணமான ஆண்களை அடையாளம் கண்டுகொள்ளத்தான் ஆண்களுக்கு காலில் மிஞ்சி அணிந்தார்கள் ஆண்கள் எப்படி நடப்பார்கள் என்பதுதான் எல்லாருக்குமே தெரியுமே அதனால்தான் பெண்களுக்கு கழுத்தில் தாலி

மன்னிக்கவும் நான் சொல்ல வந்த விஷயத்தை விட்டு வேறு எங்கோ செல்கிறேன் இப்பவும் ஆண்கள் திருமணத்தின் போது பெண்களின் கழுத்தில் தாலி கட்டுகிறோம் அந்த தாலிக்கு சில அர்த்தங்கள் இருக்கின்றன நம்மில் இது எத்தனை பேருக்கு தெரியும் அப்படி தெரிந்தவர்களுக்கு மீண்டும் ஞாபகபடுத்திகொள்ளவும் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளவும் தான் இந்த பதிவு

தாலியை நன்கு கவணித்து பாருங்கள் அதை சுற்றி மொத்தம் ஒன்பது இலைகள் உள்ளது போல தோற்றமளிக்கும் கவனிக்காதவர்கள் பார்த்துக்கொள்ளவும் அந்த ஒன்பது இலைகளும் வெரும் வடிவமைப்புக்காக செய்யப்பட்டதல்ல அவை ஒவ்வொன்றிற்கும் காயத்திரி மந்திரத்தில் ஒவ்வொரு அர்த்தம் உண்மையும் பொதிந்துள்ளது

தாலியின் இலைகள்:
1)வாழ்க்கையை உண்மையாக புரிந்துகொள்ளவேண்டும்
2)மேண்மை பெற வேண்டும்
3)ஆற்றல் மிக்கவராய் இருத்தல் வேண்டும்
4)தூய்மை அவசியம் வேண்டும்
5)தெய்வீகம் தேவை
6)உத்தம குணம் தேவை
7)விவேகம் முக்கியம்
8)தன்னடக்கம் கட்டாயம் தேவை
9)தொண்டு மனப்பாண்மை வேண்டும்

மேற்சொன்ன இத்தனை அம்சங்களையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது தான் தாலி அதுவே பெண்களை காக்கும் வேலி


வாழ்க வளமுடன்

அன்புடன்

கண்ணன்

உடை குறைப்பது தான் நாகரீகமா?



இப்போதெல்லாம் அடிக்கடி யோசிப்பது நாம் எந்த காலக்கட்டத்தில் இருக்கிறோம் எனபதை பற்றித்தான், மனிதன் தோன்றிய காலத்தில் நிர்வாணமாகத்தான் இருந்தான் பின்னர் அவனாகவே நாகரீகம் எனும் பாதையில் சுயமாக மாறத்தொடங்கினான் வெற்றுடம்புடன் திரிந்த மனிதன் தன் அந்தரங்களை மறைக்க இலை தழைகளை கொண்டு மறைக்க ஆரம்பித்தான் அந்தரங்கள் மறைக்கப்படாமல் வெளிவருவதை அன்றே விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. பொதுவாகவே ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலியல் அமைப்பு வெவ்வேறாக இருந்தாலும் பெண் என்கிற விஷயத்தில் ஆண் விருப்பம் கொண்டுள்ளான் என்பது இயற்கையாகவே இருக்கிறது அது நமக்கும் தெரியும்.

முன்பெல்லாம் நம் முன்னோர்கள் எப்படி இருந்தார்கள் என பார்த்தோமேயானால் ஆண்கள் கோவணமும், வேட்டியுமாக இருந்திருக்கின்றனர், பெண்கள் பதினாறு முழம் சேலை கட்டியிருந்திருக்கிறார்கள் இந்த காலகட்டத்தில் இருவருமே மேலாடை அணிந்திருக்கவில்லை பின்னர் மீண்டும் ஒரு நாகரீகத்தின் வளர்ச்சியில் மேலாடையும் போடத்தொடங்கினர் பின்னர் நாகரீக வளர்ச்சியில் வீடு வாகனம் இன்னும் பல இத்யாதிகள் எல்லாம் மாறின, இப்படி போய்க்கொண்டிருந்த நாகரீக மாற்றத்தில் மீண்டும் சைக்கிளிங் போல பழைய விஷங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினோம்.

இயற்கைக்கு இசைவாய் வாழ்கிறோம் என்கிற பெயரில் வீடுகள் இயற்கையை ஒத்ததாக அமைத்தனர் மீண்டும் பழைய ஒரு நிலைக்கு செல்ல விரும்பினர் இது வரவேற்கபட வேண்டிய ஒன்றுதான் ஆனால் இதில் ஒரு வில்லங்கமான விஷயத்தையும் சேர்த்துகொள்ள வேண்டிய அவசியமில்லையே என்கிற ஆதங்கத்தை தவிர்க்க முடியவில்லை, உடை நாகரீகம் இதில் பழைய நிலைக்கு நேரடியாக செல்லவிட்டாலும் மறைமுகமாக அந்த நிலைக்கு சென்று விடுவோமோ என்கிற அச்சம் வருகிறது.

பொதுவாகவே ஆண்களுக்கு அதிக உடை விஷயங்கள் இல்லை வேஷ்டி, பேண்ட், கைலி, சட்டை என ஒரு சிறிய வட்டத்துக்குள் அடக்கிவிடலாம் ஆனால் பெண்களை பொருத்தவரை எத்தனை உடைகள் எத்தனை நாகரீங்கள் இன்னும் ஏன் இப்போதெல்லாம் பெண்களும் ஆண்கள் அணியும் பேண்ட் டீசர்ட் என அணிய தொடங்கிவிட்டார்கள், சரி அணிந்தால் என்ன இதில் என்ன தவறு இருக்கிறது? சரி ஆண்கள் வெறும் வேஷ்டியோடு இருந்தாலும் அது மற்றவர்களை அதிகம் பாதிப்பதில்லை இன்னும் நேரடியாக சொல்லப்போனால் காமத்தை தோற்றுவிப்பதில்லை ஆனால் பெண்கள் அப்படியில்லையே அவர்களின் சிறு கவனக்குறைவான உடையலங்காராம் கூட பார்ப்பவர்களை முகம் சுழிக்க செய்துவிடுமே அதோடு ஒரு தவறான கண்ணோட்டத்தையும் உருவாக்கும் என்பது தெரியாதா?

முன்பெல்லாம் பெண்கள் சுடிதார் அணிந்தார்கள் அதோடு சால்வையும் போர்த்திகொண்டார்கள் அப்போது நிச்சியமாக அது நல்ல உடையாகத்தான் இருந்தது ஆனால் அதே சுடிதார் இப்போது வேறொரு வடிவம் பெற்று இருக்கிறது இப்போது உள்ள சுடிதார் எப்படியிருக்கும் என்பதற்கு படம் இனைக்க விரும்பவில்லை காரணம் உங்களுக்கே தெரியும் உடல் அவையங்களை அச்சு பிசகாமல் அளவெடுத்து காண்பிக்கும் உடைதான் நாகரீகமா? முன்பெல்லாம் உடல் அவயங்களை மறைக்கதானே ஆடை அணிந்தோம் ஆனால் இப்போது எடுத்துக்காட்டும் வகையில் ஆடை தேவைதானா? மேலும் இருக்கமான டீசர்ட் மற்றும் பேண்ட் இதை பற்றியும் அதிகம் சொல்லவோ அதற்காக போட்டோவோ இனைக்கவேண்டியதில்லை எல்லாமே உங்களுக்கு தெரியும் ஆனாலும் மாறுவதில்லை யாருக்காக இந்த ஆடை அலங்கரிப்பு?

சமீபத்திய ஆராய்ச்சியில் பெண்கள் தான் ஆண்களின் தவறான கண்ணோட்டத்துக்கு வித்திடுவதாக வெளியிட்டு இருந்தார்கள் உடனே கோபப்படவேண்டாம் ஆராய்ச்சிக்காக பங்கெடுத்தவர்கள் எல்லோருமே பெண்கள்தான், மேலும் இப்போதெல்லம் நாம் நம்முடைய தனிமையை இழந்துகொண்டிருக்கிறோம் நாம் ரோட்டில் நடந்து சென்றாலும் நம்மையும் அறியாமல் மொபைல் போனில் உள்ள கேமரா கொண்டு படம் எடுத்து விடுகிறார்கள் நாம் நினைப்போம் நம்மை யார் போட்டோ எடுக்க போகிறார்கள் என நினைத்தால் நாம்தான் ஏமாந்துகொண்டிருக்கிறோம் இப்போதெல்லாம் மார்பிங் வழியாக போட்டோவையே மாற்றிவிடுகிறார்கள் இதனால் எவ்வளவு பாதிப்பு? இருந்தாலும் சர்வ சாதரணமாக பேஸ்புக் மற்றும் ஆர்குட்டில் எந்த தயக்கமும் இல்லாமல் போட்டோவை வெளியிடுவது ஆச்சரியமளிக்கிறது சரி அவர்கள் என்ன படிக்காதவர்களா என்றால் நன்கு படித்தவர்க்ள் இதன் விளைவுகளை யோசிக்கமாட்டர்களா? கொஞ்சம் பொறுமையாய் கூகுளில் தேடிப்பார்த்தால் நம் போட்டோ கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது.


பழைய காலத்து பெண்கள் போல முழுவதும் மூடி சுற்றாவிட்டாலும் குறைந்தபட்சம் சேலையாவது அணியலாமே, சுடிதார் அணியும்போது கொஞ்சம் இறுக்கமில்லாமல் அணிந்தால் உங்கள் உடலை அப்படியே எடுத்துக்காட்டாதே? உடலை மறைக்க தானே உடை? நீங்கள் அழகாக சேலை உடுத்தி சென்று பாருங்கள் உங்களை பார்ப்பவரின் கண்ணோட்டம் நல்லவிதமாகவே இருக்கும் அதே வேளையில் கொஞ்சம் நாகரீகம் என்கிற பெயரில் மேலே சொன்ன உடைகளை அணிந்து செல்லுங்கள் உங்களை பார்ப்பவர்களின் கண்களில் வித்யாசம் தெரிவதை உங்களால் உணரமுடியும்.


நிர்வாணம் என்பது கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை ஆனால் அரைகுறை ஆடைகள் ஆபாசத்தை தோற்றிவிக்கிறது என்றால் நிச்சியம் மிகையில்லை. நாம் ஆடை அணிவது உடலை மறைக்கவும் கொஞ்சம் அழகுக்காவும் தானே! அதே ஆடையே நமக்கு பாதுகாப்பில்லாத நம்மை சமுதாயத்தில் தவறாய் பிரதிபலிக்க கூடிய நாகரீகம் எனும் பெயரில் உடுத்தும் ஆடை நமக்கு தேவைதானா? வெளிநாட்டினர் நம்மை வியந்து பார்த்த்தில் நம் ஆடைக்கும் பங்கு உண்டுதானே இப்போதும் வெளிநாட்டு பெண்கள் நம் இந்தியாவில் சேலை உடுத்துவதை பார்த்திருப்பீர்கள் தானே. வெளிநாட்டினர் எப்படியெல்லாம் உடை உடுத்துகிறார்கள் என கேள்வி வேண்டாம் அவர்களின் கலாச்சாரமும் சூழ்நிலையும் வேறு ஆனால் நமக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறதே, குறைந்தபட்சம் நம் கலாச்சார காவலர்களாக இல்லாவிட்டாலும் மனதில் தவறான சிந்தையை விதைக்க நம் உடை ஒரு காரணமாய் இருக்கவேண்டாமே.

பெற்றோர்களின் கவணத்திற்கு இப்போது நமது உணவு முறை மாற்றத்தினால் நமது குழந்தைகள் சீக்கிரமே பெரியவர்களாகி விடுகின்றனர் அதிலும் பெண் குழந்தைகள் பத்து முதல் பதிநான்கு வயதுக்குள் பெரிய பெண்களாகி விடுகின்றனர் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் உருவத்தில் பெரியவர்களாக இருக்கின்றனர் சில இடங்களில் பார்த்திருக்கிறேன் குழந்தைகள் தானே என்று சிலவிதமான உடைகளை அணிவித்து விடுகிறார்கள் பெற்றோர்களை முதலில் புரிந்துகொள்ளுங்கள் உங்கள் குழந்தையின் மீது உங்களுக்குள்ள கண்ணோட்டமும் மற்றவர்களின் கண்ணோட்டமும் ஒரே மாதிரியாய் இருக்காது அன்றாடம் செய்திகளில் பார்க்கத்தானே செய்கிறோம் குழந்தைகளும் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் நம் குழந்தைகளுக்கு நாம் ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டும் உங்களுக்கு தெரியும்தானே உங்கள் குழந்தைகளை பொருத்தவரை நீங்கள் தான் முதலில் ஹீரோ உங்களிடமிருந்துதான் குழந்தைகள் நல்ல விஷயங்களையும் கெட்ட விஷய்ங்களையும் கற்றுக்கொள்கின்றனர்.


ஒரு வரி கருத்து: அளவோடு பேசுங்கள் அதையும் ஆழ்ந்து யோசித்து பேசுங்கள்.

அன்புடன்

கண்ணன்