இன்றைய இணைய உலகில் நூற்று கணக்கான வீடியோ பகிர்வு தளங்கள் உள்ளன. அவை யாவும் வீடியோக்களை இணையம் மூலமாக பிறரிடம் பகிர்ந்து கொள்ள உதவுகிறன. இதில் மிகவும் பிரபலமான வீடியோ பகிர்வு தளம் யூடியூப் தளம் ஆகும். இது தவிர இன்னும் பல்வேறு வீடியோ பகிர்வு தளங்கள் உள்ளன. ஒரு சில குறிப்பிட்ட தளங்களில் மட்டுமே குறிப்பிட்ட வீடியோ தரவிறக்கம் செய்யும் வசதி இருக்கும். ஆனால் பெரும்பாலான வீடியோ பகிர்வு தளங்களில் இதுபோன்ற வசதி எதுவும் இருக்காது. இதுபோன்ற தளங்களில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய All Video Downloader என்னும் மென்பொருள் உதவி செய்கிறது.
மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொண்டு, பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் எந்த வீடியோவை தரவிறக்கம் செய்ய வேண்டுமோ அந்த வீடியோவின் URLயை உள்ளிட்டு Download என்னும் பொத்தானை அழுத்தி வீடியோவை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
இந்த மென்பொருளின் மூலமாக நமக்கு விருப்பமான பைல்பார்மெட்டில் வீடியோக்களை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். .avi, .wmv, .mpeg1, .mpeg2, .mp4, .mov, .flv, iPod, iPad, iPhone, Psp, Ps3 போன்ற பைல் பார்மெட்களில் வீடியோவை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். பல்வேறு தளங்களில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய இந்த ஒரே மென்பொருள் பயன்படுகிறது.
அன்புடன்
கண்ணன்
அன்புடன்
கண்ணன்
No comments:
Post a Comment