ykannan: Notepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி?

Thursday, August 4, 2011

Notepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி?

நமது கம்ப்யூட்டரில் நாம் நமக்கு தனிப்பட்ட விஷயங்களை வைத்து இருப்போம் அவற்றை மற்றவர்களிடம் இருந்து மறைத்து வைக்க சில சாஃப்ட்வேர்களையும் பயன்படுத்தி இருப்போம். ஆனால் அவை மற்றவர்க்கு நாம் அதை பயன்படுத்துவது தெரிந்தும் இருக்கும். எப்படி இதை மற்றவர்க்கு தெரியாமல் சாஃப்ட்வேர் இல்லாமல் செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.
  • முதலில் notepad ஐ ஓபன் செய்து கீழே உள்ள coding ஐ copy செய்து paste செய்யவும்.


cls
@ECHO OFF
title Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure u want to Lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock folder
set/p "pass=>"
if NOT %pass%==type your password here goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End
:End

இங்கு பச்சை நிறப் பிண்ணனியில் உள்ள type your password here என்பதற்க்கு பதிலாக உங்கள் password ஐ நீங்கள் தரலாம்.

இப்போது இந்த file ஐ நீங்கள் என்ன பெயரில் மற்றும் எங்கு வேண்டுமானாலும் save செய்யுங்கள். ஆனால் அதை .bat என்ற extension உடன் Save செய்யவும். (Ex: yourname.bat)

இப்போது நீங்கள் Save செய்த இடத்தில் ஒரு புது File ஒன்று நீங்கள் குறிப்பிட்ட பெயரில்(Ex: yourname) உருவாகி இருக்கும்.

அதை click செய்யவும் இப்போது "Locker" என்ற பெயரில் புதிய Folder ஒன்று அங்கு உருவாகி இருக்கும்.

புதிய ஃபோல்டரில் உங்கள் personal File களை copy செய்யவும்.

இப்போது வெளியே வந்து மீண்டும் உங்கள் yourname ஐ click செய்து ஓபன் செய்யவும்.

இப்போது command promptஆனது ஓபன் ஆகி இந்த ஃபோல்டர் ஐ Secure செய்யவா என்று கேட்கும். இப்போது இங்கு Y என கொடுக்கவும். இப்போது பாருங்கள் உங்கள் ஃபோல்டர் மறைந்து இருக்கும்.

மீண்டும் yourname ஐ ஓபன் செய்து command prompt இல் உங்கள் Password கொடுத்தால் அது மீண்டும் வந்து விடும்.

இதை நீங்கள் தேவையான போது செய்து கொள்ளலாம்.

உங்கள் yourname ஐ Hidden செய்து வைப்பதன் மூலம் அதையும் மறைத்து வைக்கலாம். {மீண்டும் Hidden செய்த folder ஐ பார்க்க My computer--> Tools--> Folder Options--> View--> Click "Show Hidden Files, Folders and Drives". }

நீங்கள் Password ஐ மறந்து விட்டாலும் இந்த Notepad File ஐ ஓபன் செய்து அதில் ஏற்கனவே password கொடுத்த இடத்தில் பார்த்து நினைவுபடுத்திக் கொள்ளலாம்.


அன்புடன்

கண்ணன்

No comments:

Post a Comment