ykannan: December 2010

Thursday, December 9, 2010

இன்றைய கால தாம்பத்திய வாழ்க்கை.



தாம்பத்யம் மனித வாழ்க்கையில் இன்றியமையாதது. காதல், திருமணம், தாம்பத்யம் இவை நம்மால் நமக்காக உருவாக்கப்பட்டது. இதனால் கிடைக்கும் நன்மைகள் நிறைய ஆனால் இரண்டு மனங்கள் இணைந்து புரிந்து கொள்ளும் போது தான் இது உண்மையாகிறது.

தாம்பத்யத்தின் மூலமாக இருவரது உணர்வு, மகிழ்ச்சி, துக்கம் அனைத்தும் பகிரபப்டுகிறது. இருவரும் மனம் விட்டு பேசும் போது தான் தாழ்வு மனப்பான்மை, கோபங்கள், தவறுகள் இவை அனைத்தும் தாம்பத்தயத்தினால் மறந்து மணக்கிறது வாழ்வும் சிறக்கிறது.

தாம்பத்யம் எங்கு முழுமையடையவில்லையோ அங்கு விரிசல் ஆரம்பமாகிறது. இன்றைய வேகமான கால கட்டத்தில் கணவன் மனைவியிடம் தாம்பத்யம் எந்த இடத்தில் உள்ளது என்றால் 75 சதவீதம் பேர் சொல்லும் காரணம் அதற்கு எங்க நேரம்?

இது ஆரோக்கியமான தாம்பத்யமா என்றால் நிச்சயம் இல்லை இவர்களெல்லாம் கடமைக்காக வாழ்பவர்கள்.

இன்றைய நிலையில் பெயர், பணம், புகழைத் தேடி தான் ஓடவேண்டிய நிலையில் இருக்கிறோம் மனம் விட்டு பேச நேரம் இல்லை. அப்படியே நேரம் கிடைத்தாலும் வேலை அலுப்பு, பொழுது போக்கு மையங்கள், தொலைக்காட்சி, குழந்தைகள் என நேரம் சென்று விடுகின்றது.

நம் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள், உறவினர்கள், உடன் அலுவலகத்தில் பணி புரிபவர்கள் என்று அவர்களைப் பற்றி அறியாமல் இருந்தால் தவறில்லை. ஆனால் தம் வீட்டில் என்ன நடக்கின்றது என்று பல பேருக்கு தெரிவதில்லை. காலையில் பணிக்கு செல்வதும் இரவு வீட்டுக்கு வரும் நேரம் தெரியாமல் தான் இங்கு அநேகம் பேர் உழைக்கின்றனர்.

நம் வீட்டுக்குத்தான் உழைக்கிறார்கள் என்றாலும் குழந்தைகளுடன் விளையாடவும், மனைவியுடன் நேரத்தை செலவழிக்கவும் முடியவில்லை இது போன்ற அருமையான நேரங்கள் என்ன சம்பாரிச்சு செலவு செய்தாலும் கிடைக்காது என்பதை உணர்வதில்லை.

இன்றைய வேகமான கால கட்டத்தில் மனிதன் வாழ்க்கை சக்கரம் போல் ஆகிவிட்டது. எந்த இடத்திலம் நிற்க கூட நேரமில்லை. அவர்கள் விரும்பும் பல நல்ல விசயங்கள் அவர்கள் இழக்கின்றனர். இதில் முக்கியமான ஒன்று தாம்பத்யம். இது கவலையான விசயம் இதற்கு மாற்றுக்கருத்து இல்லை என்றும் கூறலாம்.

இருவரும் வேலைக்குச் செல்வது இன்று சாதாரணம் அப்போது தான் குடும்பம் நடத்த முடியும் இது இன்றைய காலத்தின் கட்டாயம். இருவரும் இரவு பகல் பாராமல் இங்கு உழைப்பது சர்வசாதாரணம். இதன் பலன் பணம், சொகுசான வாழ்க்கை, இன்ப சுற்றலா, வார இறுதியில் பெரிய விடுதியில் உணவு, என்ன வேண்டுமா அது உடனே வாங்கலாம் ஆனால் இது மட்டும் தான் வாழ்க்கை என்று ஆகிவிட்டது. ஆனால் தாம்பத்ய வாழ்க்கை ? எத்தனை செலவு செய்தாலும் தாம்பயத்ய வாழ்க்கைக்கு ஈடாகுமா?

இன்று நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்கு அதிகரித்து வருவதும், திருமணம் ஆன சில மாதங்களிலேயே பிரிவற்கு முக்கிய காரணம் தாம்பத்தியமே என பல ஆய்வுகள் கூறுகின்றன. ஒருவர் வாழ்க்கையில் முன்னேறுவதற்க அவரது மனமும், உடலும் உற்சாகமாக இருக்க வேண்டிது மிக அவசியம். மனதிற்கும், உடலுக்கும் உற்சாகமளிக்கும் தாம்பத்யத்தை இன்று பலர் மறந்து விட்டனர் அதற்கு அவர்கள் செர்ல்லும் காரணம் நேரமில்லை. ஆனால் பின்வரும் நாட்களில் நீதிமன்றங்களை நாடும் போது மட்டும் நேரம் இருக்கிறது.நீதிமன்றத்தில் விவாகரத்துக்காக நிற்கும் நேரத்தில் மனம் விட்டு பேசியிருந்தால் இன்று பல குடும்பங்கள் இணைந்து இருக்கும்.

பணம், புகழ் என்று வாழ்க்கையில் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டு இருப்பார்கள் அவர்கள் அனைத்தையும் சம்பாரித்து நின்று பார்க்கும் போது பணத்தை தவிர அங்கு வேற ஒன்றும் இருக்காது. இவர்கள் பணம் இருந்தும் நிம்மதியை தேடி மீண்டும் ஓட வேண்டி இருக்கும்.

இருவரும் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தும் தாம்பத்யம் இல்லாமல், அவர்களுக்கு தெரியமலேயே அவர்களது நம்பிக்கை இழக்கின்றனர். தங்களது நிறை குறை, இன்பம் துன்பம், கோபங்களை தனது துணையுடன் இணைந்து அதற்காக நேரம் ஒதுக்கி துணையுடன் செலவிடுவது தான் நல்ல தாம்பத்யம். நல்ல தாம்பத்யம் தான் குழந்தைகள், செல்வம் என் வீட்டிற்குள் வாழ இயலும். மனித வாழ்க்கைக்கு தாம்பத்யம் அவசியம் அதை தொலைத்து விட்டால் அப்புறம் எதைத் தேடுவது.

அன்புடன்

கண்ணன்

ஆண்களிடம் பெண்களுக்கு பிடித்தது என்ன? II

பெண்களுக்கு எப்படிப்பட்ட ஆண்களை பிடிக்கும் என்று பல கருத்து கணிப்புகள் நடத்தி உள்ளனர் ஒவ்வொன்றிற்கும் ஒரு நல்ல காரணம் இருக்கும்.. இந்த கால பெண்கள் எப்படிபட்ட ஆண்களை விரும்புகின்றனர். திருமணம் என்று வந்ததும் பெண்களின் கனவு அதிகமாகிறது. தனக்கு வரும் கணவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். இது வரவேற்கத்தக்க விசயம். இவர்கள் எதிர்பார்ப்பது சில...
1. பெண்கள் ஆண்களிடம் முதலில் எதிர்பார்பது மரியாதையைத்தான். மனைவி என்றால் தனக்கு அடிமைபோல சேவை செய்ய வந்தவள் என்ற எண்ணம் இன்றும் ஆண்கள் மத்தியில் நிலவுகிறது. பெண்களது கருத்துகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

2. பாராட்டு அவர்களை பாராட்ட பாரட்டத்தான் அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். உதாரணத்திற்கு மனைவி வைத்த குழம்பில் உப்பு இல்லை என்றாலும் நல்லா செய்திருக்கிறாய் என்ற பாராட்டும் போது பிடிக்கும்.

3. அவர்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல விசயத்தையும் ஊக்குவிக்க வேண்டும். கார் ஓட்ட பழகுகிறார்கள் என்றால் கிண்டல் அடிக்காமல் பக்குவமாக சொல்வதை விரும்புவார்கள்.

4.ஆண்களின் உடை, பேசும் பேச்சு போன்றவற்றில் அவர்களுக்கு பிடித்த மாதிரியே அனைத்தையும் பேச வேண்டும். பெண்கள் எந்த மாதிரியான விசயங்க பேச ஆரம்பிக்கிறார்களே அதைப்பற்றியான தெளிவான பார்வையில் இருக்க வேண்டும் ஆண்களின் பேச்சு.

5.சமயத்திற்கு ஏற்றபடி சாமர்த்தியமாக நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். சரியான வேளையில் சரியான வழிகளைச் சொல்லும் ஆண்களை பெண்கள் மெச்சுவார்கள்

6.பெண் என்றால் பொன் முட்டையிடும் வாத்து என்று ஆண்கள் நினைக்கிறார்கள். அவர்களின் தேவைக்காக நெருங்கி வருதல், வேண்டிய பணத்தை பெற்றுச் சென்று ஊதாரித்தனமாக செலவு பிடிக்காத ஒன்று.

7. மதுக்கு அடிமையாக உள்ள ஆண்களை வெறுக்கின்றனர் ஆனால் அளவாக சாப்பிடுங்கள் என்றும் சொல்பவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்து விட்டது.

8. அடிக்கும் ஆண்களை அறவே வெறுக்கிறார்கள். கூடவே திருப்பித் தாக்கவும் செய்வார்கள். மென்மையாக கண்டிப்பது அவர்களுக்கு பிடித்த விசயம்.

9. பெண்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும். புரிந்து கொள்ளும் ஆண்களை அதிகம் விரும்புகின்றனர்.

10.காதலிக்கும் போது எப்படி பெண்களிடம் உருகி உருகி பேசுகிறார்களோ அதே போல் திருமணத்திற்கு அப்புறமும் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

11.புத்திசாலி ஆண்களை ரொம்ப புடிக்கும்.

12. அழகான ஆண்களைத்தான் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. பெண்களுக்கு அழகு ஒரு பொருட்டல்ல.

ஆண்கள் எப்படி இருந்தாலும் ஒரு பெண்னுக்கு அவனை பிடித்து விட்டால் யார் என்ன சொன்னாலும் அவன் தான் கணவன் என்று முடிவு செய்து யாரையும் எதிர்க்க தயங்கமாட்டார்கள்...

அன்புடன்

கண்ணன்

ஆண்களிடம் பெண்களுக்கு பிடித்தது என்ன?


1. பெண்கள் ஆண்களிடம் முதலில் எதிர்பார்பது மரியாதையைத்தான். மனைவி என்றால் தனக்கு அடிமைபோல சேவை செய்ய வந்தவள் என்ற எண்ணம் இன்றும் ஆண்கள் மத்தியில் நிலவுகிறது. பெண்களது கருத்துகளுக்கு பதில் அளிக்க வேண்டும். பல ஆண்கள் பெண்களின் உடல் அமைப்பை கிண்டல் செய்வதையும், அவர்களின் மாதவிடாய் பற்றி ஜோக் அடித்து சிரிபதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இவைகளை பெண்கள் அறவே விரும்புவதில்லை.


2. சமயத்திற்கு ஏற்றபடி சாமர்த்தியமாக நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். சரியான வேளையில் சரியான வழிகளைச் சொல்லும் ஆண்களை பெண்கள் நெஞ்சில் சுமப்பார்கள். உதாரணமாக, மனைவி தன் கணவனிடம் கேட்கிறாள், நான் குண்டாக இருக்கிறேனா? என்று! அதற்கு ` என்னைவிட அழகாகவே இருக்கிறாய். இதற்காக வருத்தபட வேண்டிய அவசியம் இல்லை. உன்னை நான் எப்போதும் நேசிக்கிறேன். உனக்கு உடல் பருமனாக இருப்பதாக தெரிந்தால் உடற்பயிற்சி செய் டார்லிங்' என்று கூற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.




3. பெண்ணுக்கான உரிமையை பெற்றுத் தருபவராக இல்லாவிட்டாலும் பெண்ணை பெண்ணாக நடத்தும் பெருந்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். ஆண்கள் செய்யும் எந்த வேலையையும் செய்யும் அளவுக்கு பெண்களுக்கும் உடல்பலம்மனோபலம் இருக்கிறது என்பதை புரிந்து நடந்து கொள்பவராக இருக்க வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.


4. பெண்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதில் ஆண்கள் கவனம் செலுத்து வதில்லை. சிறு பிரச்சினை என்றாலும் கூட, போர்க்களத்தில் நிற்பதுபோல கொந்தளிக்கிறார்கள். நாம் இருவரும் ஒருங்கிணைந்து வாழ்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல் இஷ்டம் போல் பேசுகிறார்கள். அவர்கள் பெண்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.


5. பெண் மீது நம்பிக்கைத் தன்மை கொண்டவராக ஆண் இருக்க வேண்டும். அவள் தன் விருப்பத்திற்கு இணங்கவே பிறந்தவள் என்பதுபோல் நினைத்துக் கொண்டு, நினைத்த நேரத்தில் `இன்ப உலகம் செல்லலாம் வா' என்று வற்புறுத்தி அழைக்கக்கூடாது என்றும் விரும்புகிறார்கள்.



6. பெண் என்றால் பொன் முட்டையிடும் வாத்து என்று ஆண்கள் நினைக்கிறார்கள். அவர்களின் தேவைக்காக நெருங்கி வருதல், வேண்டிய பணத்தை பெற்றுச் சென்று ஊதாரித்தனமாக செலவு செய்வது, மது அருந்துவது என்று இருக்கும் ஆண்களைக் கண்டு பெண்கள் எரிச்சல் அடைகிறார்கள். அத்துடன் தங்களை கைநீட்டி அடிக்கும் ஆண்களை அறவே வெறுக்கிறார்கள்.


7. காதலிக்கும்போது `உன்னை பிடிக்கிறது, உன் சிரிப்பில் மயங்குகிறேன்' என்று ஆண்கள் சொல்கிறார்கள். அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க பலவித முயற்சிகளை செய்கிறார்கள். ஆனால் மணவாழ்வுக்குள் நுழைந்துவிட்டால் அந்த நகைச்சுவை உணர்வை மறந்து விடுகிறார்கள். அதன்பிறகு அவள் சிரிப்பது ஆண்களுக்கு எரிச்சலைத் தூண்டுகிறது. வாழ்வில் எல்லாம் முடிந்து போனதாக எண்ணி சிடுசிடுபானவர்களாக மாறிவிடுகிறார்கள். அப்படி இல்லாமல் கலகலப்பாக இருக்கும் ஆண்களையும், பெண்களின் கலகலப்பான, இயல்பான உணர்வை ஏற்றுக்கொள்ளும் ஆண்களையும் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.




8. புத்திசாலி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும். புத்திசாலித்தனம் என்றால் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் போட்டி போடும் அளவுக்கு சிறந்த அறிவாளியாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. குடும்பம், வாழ்வு பற்றிய தெளிவான எண்ணம் கொண்டவராகவும், குடும்ப முன்னேற்றம் குறித்த உள்ளுணர்வு கொண்டவராகவும், அதற்கான வழிகளை புரிந்து நடந்து கொள்பவராகவும் இருந்தாலே போதும். நீங்கள் அப்படித்தான் என்றால் உலகமே எதிர்த்தாலும் நீங்கள்தான் அவள் மனதை ஆளும் ராஜாவாக இருப்பீர்கள். எல்லையில்லா நேசம் காட்டுவார்கள் உங்கள் மீது.


அன்புடன்

கண்ணன்