ykannan: வானத்தை முட்டும் உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயில்

Thursday, September 23, 2010

வானத்தை முட்டும் உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயில்

வானத்தை முத்தமிடும் துபாயின் புர்ஜ் கட்டிடம் உலகத்தின்
மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இதைப்பற்றி தான் இந்த பதிவு.

இந்த கட்டிடம் 160 நிலைகளை கொண்டு 818 மீட்டர் உயரமுள்ளது.
இதன் உயரத்தை சொல்ல வேண்டுமானால் கிட்டத்தட்ட 1 கி.மீ (KM)

இந்த கட்டிடம் கட்டி முடிக்க மொத்தம் 2 பில்லியன் டாலர்
செலவாகியுள்ளது. இதன் பராமரிப்பு தூய்மைபடுத்த ஆஸ்திரேலியாவில் இருந்து 8 மில்லியன் டாலர் செலவில் கிளினிங் சிஸ்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் கடந்த 4 -ம் தேதி முதல் இது பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதைப் பற்றிய சில சுவாரஸ்சியமான தகவல்கள்:

* புர்ஜ் என்றால் டவர் இன் அரபு ( Tower in Arab) என்று பொருள்.

* இதன் தட்பவெட்பம் கட்டிடத்தின் கீழே இருப்பதை விட கட்டிடத்தின்
உச்சியில் 10 டிகிரி செண்டிகிரேட் குளிர்ந்து இருக்கும்.

* இந்த கட்டிடம் 500 ஏக்கர்-ல் அமைந்துள்ளது.

* 12 ஆயிரம் வேலையாட்கள் 100 நாடுகளில் இருந்து வந்து கட்டிடம்
கட்டும் பணி செய்துள்ளனர்.

* 22 மில்லியன் மனிதனின் உழைக்கும் நேரம் இந்த வேலை முடிக்க
பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

* மார்ச் 2005 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த பிராஜெக்ட் முடிய
5 வருடம் எடுத்துக் கொண்டுள்ளது.

இந்த புர்ஜ் கட்டிடம் சம்பந்தமான சில காட்சிகள்
The Al-Burj Dubai with estimated height exceeding 1050 meters



Basement of the X-seed 4000 is a large integrated park



City of Dubai with the Burj Dubai standing high at the middle.



burj-dubai-crane

உலகில் உள்ள ஏனைய கட்டிடங்களுடன் ஒப்பிடும் போது இக் கட்டிடம் இவ்வாறு காட்சி அளிக்கிறது



அன்புடன்

கண்ணன்

No comments:

Post a Comment