Saturday, September 25, 2010
தொலைபேசி அரட்டையில் கவனம்!
ஒருவர் காதலிக்கிறார் என்பதை அவரது காதையும், செல்பேசியையும் வைத்துச் சொல்லிவிடலாம்.எங்க அவர் காதைப் பார்க்க முடிகிறது.எப்போதும் காதில்
செல்பேசி ஒட்டிக் கொண்டிருக்கிறதே என்று சொன்னால், அவர் நிச்சயம் காதலில் விழுந்தவராகத்தான் இருப்பார்.
இது டெலி மார்க்கெட்டிங் வேலை செய்பவர்களுக்குப் பொருந்தாது..
பெரும்பாலான காதலர்கள் வெகு நேரம் தொலைபேசியில் அரட்டை அடிப்பதை வழக்காமாகக் கொண்டுள்ளனர். நிற்கும் போது, நடக்கும் போது பயணிக்கும் போது என எப்போதும் ஏதாவது ஒன்று இவர்கள் வாயிலும், காதலும் போய்க்கொண்டே இருக்கும்.
கூட இருப்பவர்கள்தான், மணிக்கணக்கா அப்படி என்னத்தான் பேசுவார்களோ என்று புலம்புவார்கள். அவர்களும், திருமணத்திற்கு முன்பு அப்படி பேசியவர்களாகத்தான் இருப்பார்கள் என்பது வேறு கதை.
ஆனால் இப்படி தொலைபேசியில் பேசுவதில் மிகவும் கவனம் தேவை என்பது எடுத்துக் கூறவே இந்த கட்டுரை. அதாவது, இப்படி செல்பேசியில் பேசிக்கொண்டிருப்பதால், ஒருவரது படிப்போ அல்லது பணியோ, மற்றவர்களுடனான சுமூக உறவோ பாதிக்கப்படும் நிலையில், தொடர்ந்து அப்படி பேசிக் கொண்டிருக்க முடியாதல்லவா? ஒன்றை பாதிக்கும் மற்றொன்றை எப்படி தொடர்வீர்கள்.
விஷயத்திற்கு வருவோம். காதலிக்கத் துவங்கிய புதிதில் 24 மணி நேரத்தில் 23.55 நிமிடங்களை செல்பேசியிலேயே கழித்த காதலர்கள் சில மாதங்களுக்குப் பிறகு வெளி உலகம் ஒன்று இருப்பதை அறிவார்கள்.
பிறகு இவர்களது பேச்சு நேரம் குறையும். ஒரு முறை, ஆசையாக போன் செய்யும்போது, ரொம்ப முக்கியமான வேலையில் இருக்கிறேன். இரவு பேசலாம் என்று மற்றவரின் பதிலுக்குக் கூட காத்திராமல் போனை கட் செய்யும் நிலையும் ஏற்படும்.
உண்மையிலேயே ஒருவர் அதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும், இது ஆரம்பத்தில் காதலருக்கு எரிச்சலை உண்டாக்கும். காதலிக்கத் துவங்கிய புதிதில் அலுவலகம், கோயில் என்று எதையும் பாராமல் செல்பேசியில் பேசியவர், இப்போது நம்மை உதாசீனப்படுத்துதாக மனம் குமுறும்.
எனவே இந்த சிக்கலைத் தீர்க்க, ஆரம்பத்திலேயே, அலுவலக/பயண நேரத்தில் போன் பேசுவதைத் தவிர்ப்பது நலம்.
ஆரம்பத்தில் நிறையப் பேசி பின்னர் பேசாமல் இருக்கும்போது காதல் புயல் வலுவற்றுப் போனதாகத் தெரியும். அதனால் எத்தனை குறைவான நேரம் பேசமுடியுமோ, அவ்வளவு குறைவான நேரத்தை மட்டும் குறிப்பிட்டு அதனைத் தொடர்ந்து கடைபிடித்தால் உங்கள் காதலில் லேசான பூகம்பங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
இந்த விஷயத்தை எத்தனையோ காதலர்கள் உணர்வுப்பூர்வமாக
உணர்ந்திருப்பார்கள்.. அல்லவா?
அன்புடன்
கண்ணன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment