ykannan: மனைவிமார்களை கைக்குள் போட்டுக் கொள்வது எப்படி??

Friday, September 24, 2010

மனைவிமார்களை கைக்குள் போட்டுக் கொள்வது எப்படி??


முதலில் நெடுஞ்சான் கிடையாக அவங்க காலில் விழுந்து விடுவது. (என்ன சார் இது எழுந்திரிங்க! சொன்னவுடனே இப்படியா? பொறுங்க நாம தப்பு செஞ்சுட்டோம்னா/அது அவங்களுக்கு தெரிஞ்சிட்டா மட்டும் தான் அப்படி செய்யணும்,சரியா!)

அப்படி விழுந்து விட்டு தலை குனிந்தவாறே அவங்க கிட்டே இருந்து நல்ல பதில் வரும் வரை அப்படியே கிடைக்கணும். தலை தூக்கி பார்க்கக் கூடாது. மிதி விழும் அபாயம் இருக்கிறது! உஷார்!!
இதெல்லாம் ஆரம்ப தற்காப்பு தான்!!

இனி தான் பயிற்சி ஆரம்பம்.

விழி விரித்து ஜூம் லென்ஸ் போட்ட மாதிரி கண்களை வைத்துக் கொண்டு அவங்க நம்மை முறைத்தால் தலை தாழ்ந்து நடக்க பழகிக்கணும். சரியா? ம்ம்ம் நல்லா தலையாட்டுறீங்களே! good அது தான் நல்ல பிள்ளைக்கு அழகு. அப்படி பார்க்காமல் வீம்புக்கு நாமும் முறைத்தால், நாம் பெற்ற சின்னஞ் சிறுசுகளுக்கு "மொத்து" விழும் அபாயம் இருக்கிறது.

கல்யாணத்துக்கு முன்பே கிரிக்கெட் பயிற்சி இருத்தல் கூடுதல் தகுதி உடையவராவர். ஏன்னா? ஏன்னு கேளுங்க சார்? ம்ம்ம் அப்படி தான்.

கிச்சனில் இருந்து பறந்து வரும் மதிப்பு மிக்க ஆயுதங்கள் இன்ன பிற வஸ்துக்களை கேட்ச் பிடிக்க, அடி விழாமல் தப்பிக்க...

அவங்க நம் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் போது ஏதாவது நாம் எசகு பிசகாக பேச, பொளேரென்று அடி விழுந்தால், விம்மாமல் விக்காமல் வாய்க்குள் அடக்கி அதை வெளி வர விடாமல், உறு தெரியாமல் அழிக்க பழகிக் கொள்ள வேண்டும். சரியா? சரின்னா சரி சொல்லணும்.

ஷாப்பிங் மால் சினிமா தியேட்டர் புடவை, நகைக் கடை போன்ற இடங்களுக்கு போகும் போது பர்சை அவங்க கையிலேயே ஒப்படைத்து விடுவது ஷேஃப்டிக்கு ஷே ஃப்டி!! உத்தமம்.

நம்ம அம்மா வீட்டுக்கு மறந்தும் கூட அடிக்கடி அவங்களை அழைத்துக் கொண்டு போய் விடக் கூடாது. அம்மாவை இங்கே வரச் சொல்லிடனும். அப்படியே வந்தாலும், காலையில் வந்தவங்களை இரவு தங்க அனுமதிக்கக் கூடாது. மாலைக்குள் ஒப்பேத்தி அடுப்பிடனும். புரியுதா இது ரொம்ப முக்கியமான பாடம்.

ரொம்பவும் அவங்களுக்கு ஐஸ் வைத்து நைஸ் பண்ணனும்னா, e- மெயில் f-மெயில் g-மெயில் எல்லாத்துக்கும் ஒங்கட பேரத் தான் பாஸ் வேர்டா போட்டு வச்சிருக்கேன்னு சொல்லிடனும். ஆபத்துக்கு பாவமில்ல!

அம்புட்டு தாங்க! இதத் தவிர வேற எந்த வித ஆபத்தான கட்டம் வந்தாலும், மேலே முதல் வரி இருக்கு பாருங்க அத செஞ்சிடனும். அதை by heart டா வச்சுங்க. ஏன்னா இது heart beat விஷயம். இப்படியெல்லாம் நான் சொல்வேன்னு நீங்க எதிர் பார்த்தா Sorry!!!



மேலே சொன்ன விஷயங்களை படிச்சு சிரிச்சதோட சரி ; அதை சுத்தமா உங்க மூளையிலிருந்து delete செய்து விட்டு கீழே உள்ளதை படிக்க வாங்க!

பெண்கள் நம் வாழ்க்கையில் அருமை பெருமை மிக்கவர்கள். பொறுமையானவர்கள். நம்மமோடு வாழப் பிறந்தவர்கள். அதனை மனதில் கொண்டு இதை இங்கே வரி பிறழாமல் மனதில் இருத்திக் கொள்தல் அவசியம்.


கல்யாணமாகாத இளைஞர் பெருமக்களே நான் சொல்வதை சற்று கவனமாய் படியுங்கள்.


உங்களுக்கு வருங்கால மனைவியை நீங்கள் தேடிக் கொண்டாலும் சரி ; அல்லது உங்கள் பெற்றோர்கள் தேடி அமைத்துத் தரும் மனைவியாக இருந்தாலும் சரி ; நீங்கள் உங்கள் பெற்றோர்களிடம் மிக சரியாய் அவர்கள் மனதில் பதியும் படி, வரதட்சணை எனும் கைக்கூலி வாங்கினால் இந்த இல்லறத்தில் ஈடுபட மாட்டேன் என்று நீங்கள் கட் அண்ட் ரைட்ட்டாக சொல்லி விடுங்கள்.

காலமெல்லாம் உங்களோடு கைக் கோர்த்து வாழப் போவது உங்கள் மனைவியே யன்றி உங்கள் பெற்றோர்களோ அல்லது சொந்த பந்தங்களோ அல்ல. இப்படி செய்தாலே பெறும் பாலான மனைவிகள் அன்பினால் கட்டுண்டவர்களாவார்கள். இது நிச்சயம்.

அப்படியல்ல நாங்கள் வாங்கியே தீருவோம் என்று அடம் பிடிக்கும் பட்சத்தில், அப்படியானால் நான் என் மனைவியை அழைத்துக் கொண்டு தனி குடித்தனம் போய் விடுவேன் என்று கோரிக்கையை முன் வையுங்கள், ஒரு வேளை அப்ப அவர்களின் மன நிலை மாறக் கூடும்.

எப்படி தான் நாம் போராடினாலும் சீர் செனத்தி என்று ஏதாவது கை மாறத் தான் செய்யும். கண்டுக்கொள்ளாதீர்கள். விட்டு விடுங்கள். நான் சொல்கிற ஒரு விஷயத்தை மட்டும் மனதில் வையுங்கள்.

உங்களின் சொந்த சம்பாத்தியத்தில் கிடைக்கும் பணத்தை கொஞ்சம் கல்யாணத்துக்கு முன்பே யாருக்கும் தெரியாமல் சேமிக்க ஆரம்பித்து விடுங்கள். அதைக் கொண்டு ஐந்து பவுனிலோ (சவரனிலோ) பத்து பவுனிலோ ஏதாவது ஒரு நகை செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு அதிகமாக இருந்தாலும் ஒட்டியாணம் செய்து வைத்துக் கொண்டாலும் சரியே சந்தோஷம். அய்யா அவ்வளவெல்லாம் இல்லை என்று சொல்லும் பட்சத்தில் ஒரு பவுன் 8 கிராம் காயின்சை யாவது வாங்கி,கல்யாணம் முடிந்து முதன் முதலில் (இரவிலோ/பகலிலோ) உங்கள் மனைவியை சந்திக்கும் போது அதை அவர்கள் கையில் கொடுத்து, இது எனது சொந்த சம்பாத்தியம், உனக்காக வாங்கி ரகசியமாய் வைத்திருந்தேன். இது என் குடும்பத்தில் யாருக்கும் தெரியாது. தெரியவும் வேணாம். உனது குடும்பத்திலிருந்தும் இந்த செய்தி வெளியே போகவும் வேணாம் என்று சொல்லி கொடுத்துப் பாருங்கள். அவர்கள் கைக்குள் நீங்கள் கொடுத்தது, அவர்கள் உங்கள் கைக்குள் வந்த மாதிரி தான். அன்பை வெளிப் படுத்த எவ்வளவோ வழிகளில் இதுவும் ஒன்று!!

இதற்கு மேல் நான் என்ன சொல்லணும் என்று எதிர் பார்க்கிறீர்கள். என் இளைஞர் பெருமக்களே போங்க போய் நிறைய நல்ல வழிகளில் சம்பாதியுங்கள்!!

உங்கள் நல்ல மனதிற்கு அருமையான குணவதியான மனைவி வாய்க்கும். இதை படித்து விட்டு, இதை படித்து தான் இப்படி செய்தேன் என்று வரும் மனைவியிடம் உளறி வைக்காதீர்கள். அங்கே உங்கள் அறிவு வெட்ட வெளிச்சமாகிவிடும்.

அன்புடன்

கண்ணன்

No comments:

Post a Comment