ykannan: திருமணத்தின் பின் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

Wednesday, September 22, 2010

திருமணத்தின் பின் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப்பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி? என்று பல நண்பர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றனர் அவர்களுக்கான ஆலோசனைகள்!

1. மனைவியை அடிக்கடி அழகுக்கலை நிலையத்துக்கு அனுப்பவேண்டும்.

2. மனைவி பாட்டியானாலும் நாகரிக ஆடைகளை எப்பொழுதும் அணியவேண்டும்.

3. உங்கள் அலுவலகத்தில் இளம் பெண்கள் ஆண்களைப்போல் ஆடை அணியவேண்டும்என்ற கொள்கையினைக்கொண்டு வரலாம். (இதன் மூலம் பெண்களை பார்ப்பதனால் உங்களுக்கு வரும் பெண்கள் மீதான மோகத்தினைத் தவிர்த்துக் கொள்ளலாம்.)


4. அடிக்கடி உங்கள் கணனிக்கு மாற்றுகின்ற வோல் பேபர்களில் அந்த நடிகைகள் எப்படி இருக்கிறார்களோ அதேபோல் உங்கள் மனைவியையும் போட்டோ எடுத்து உங்கள் கணனிக்கு இந்த போட்டோக்களை மாற்றிக்கொள்ளலாம்.

5. பாட்டிமாரை (அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களை) நண்பிகளாக வைத்துக்கொள்வதோடு அடிக்கடி அவர்களைச் சந்தித்து பல மணி நேரம் பொழுதைக்கழிக்க வேண்டும். (எந்த ஒரு இளம் நண்பிகளும் இருக்கக்கூடாது.)

6. தன்னைவிட பத்து வயது குறைந்த பெண்ணை திருமனை செய்யலாம்.(மனைவியை நீங்கள் எப்போதும் பார்த்துக்கொண்டு இருக்கலாம் மனைவி உங்களைவிட வேறு ஒருவரைப் பார்த்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல)

7. நடிகைகளைப்பற்றி பேசுகின்ற அல்லது நடிகைகளின் அந்தமாதிரிப்படங்களின் களஞ்சியமாக இருக்கின்ற வலைப்பதிவுகளுக்கு போவதைத் தவிர்த்து நல்ல வலைப்பதிவுகளுக்கு அடிக்கடி போய் வரலாம்.

8. தினமும் பின்னேரங்களில் பெண்கள் அதிகமாக நடமாடும் Majestic City , போன்ற இடங்களுக்கு சென்று பெண்களோடு சேட்டை செய்வதனைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். வேண்டுமானால் முதியோர் இல்லங்களுக்குப் போய் வரலாம்.


இதனைக் கடைப்பிடித்தால் பெண்கள் மீதான உங்கள் மோகம் குறைவடைந்து உங்கள் மனைவிமீது அதிகம் அன்பு,ஆசை வரும்.



அன்புடன்

கண்ணன்

No comments:

Post a Comment