ஆண்களுக்கும் அழகுக்கும் சம்பந்தமில்லை என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். இப்படி நினைப்பது மிக பெரிய தவறு என்பது என் கருத்து
*ஆண்களின் வெளிபுற தோற்றம் மிகவும் முக்கியம் *
அணியும் ஆடை, இனிமையான பேச்சு, சிரித்த முகம் இவை உங்களை மற்றவர்களுடன் வேறுபடுத்தி உங்களை கம்பீரமாக காட்டும்.
*முதலில் உங்கள் முக அழகை பற்றிய சில குறிப்புகள்*
சில ஆண்களுக்கு டீன் ஏஜில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்னை முகப்பரு சில நாட்கள் இருந்தாலும் அதன் வடு மாறாது. இதற்க்கு சரியான தீர்வு சாதிக்காய், சந்தனம், மிளகு இவை மூன்றையும் சேர்த்தரைத்த விழுதை பருக்களின் மீது தடவிவரவும்.
பாசிபயிறு மாவு, கடலைமாவு சிறிது தயிர் சேர்த்து குளிக்கும் போது அல்லது முகம்
அலசும் போதும் இந்த பேஸ்டை பயன்படுத்தவும்
*முகம் வரட்சியினை போக்க:*
கொத்துமல்லி மற்றும் புதினா இவற்றை சேர்த்து கெட்டியாக அரைத்து, முகத்தில் வாரம்
ஒருமுறை பூசி வரலாம்.
ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சைச்சாறு கலந்து, முகத்தில் தடவி வந்தாலும் முக வரட்சி மாறும்.
வெயிலில் செல்லும்போது, சன் ஸ்கிரீன் அடங்கிய ஃபேர்னெஸ் க்ரீம் பயன்படுத்தலாம். இதைக் கை கால்களுக்கும் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.
உதட்டுக்கு வேசலீன் அடங்கிய லிப் ஜெல்களைப் பயன்படுத்தவும்.
கை மற்றும் கால்களில் நகங்களை ஒட்ட வெட்டி நீட்டாக வைத்திருப்பதே ஆண்களுக்கு அழகு.
அன்புடன்
கண்ணன்
Wednesday, August 4, 2010
ஆண்களுக்கான அழகு குறிப்புகள் I
பெண்களை விட ஆண்கள் அழகின் மீது அதிகமாக கவனம் செலுத்துவதில்லை..அது ஏன் என்றும் புரியவில்லை...(இயற்கையிலே அவங்க அழகாக இருப்பதாலோ???)ஆனால் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக வெளியுலக தொடர்பு இருக்கு.அவர்கள் தான் வெயில்,மழை,தூசியிலும் செல்வார்கள்.ஆனால் அவங்க அழகின் மீது அக்கறை காட்டமாட்டாங்க.ஆண்கள் ஆடைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் முகத்துக்கு கொடுப்பதில்லை எனபது தான் வருத்தம் ஆண்களும் அழகுக்குனு நேரம் ஓதுக்கி உடலை பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.வீட்டில் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் மாதம் ஒரு முறை ப்யூட்டி பார்லர் போகனும்.
வீட்டிலே செய்யும் சில சிம்பிளான அழகு குறிப்புகள் சொல்கிறேன்..வாரம் ஒரு முறையாவது செய்யுங்கள்
முக அழகுக்கு:
பொதுவாக ஆண்கள் வேலைநிமித்தமாக அதிகமாக வெயிலில் சுற்றிதிரிவார்கள்.வீட்டுக்கு
வந்தவுடன் முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் அலசவும். இன்னும் கொஞ்சம் டைமிருந்தால் ஐஸ் கட்டியினை ஒரு துணியில் போட்டு முகத்தில் ஓத்தடம் கொடுக்கவும்.இதனால் முகம்
தெளிவடையும்.இதனை தினமும் செய்யுங்கள்.
சில ஆண்களுக்கு முகம் உலர்ந்து சொரசொரப்பாக இருக்கும் அவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை (மூக்கை மூடிக்கொள்ளவும்)எடுத்து அதில் பாலாடையும்,பன்னீரையும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவிடவும்.பிறகு இளஞ்சூடான வெந்நீரில் அலசினால் சில நாட்களில் தோல் மிருதுவாக மாறி பளபளப்பாக மாறிவிடும்.இது மாசம் 2 முறை செய்யவும்.
தினமும் பசும் பாலில் ஏடு எடுத்து முகம் முழுவதும் நன்கு அழுத்தி தேய்து ஊற வைக்கவும்.
பின்பு வெதுவெதுப்பான நீரில் அலசவும்.
முகத்தின் கரும்புள்ளிகள் மாற சிறிது எலுமிச்சை சாறுடன் தயிரை சமமாக கலந்து முகத்தில்
தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசவும். கருபுள்ளிகள் மாயமாக
மறைந்துவிடும்.
உதடுக்கு:
சில ஆண்கள் சிகெரட் குடித்து உதடுகள் கருமையாக இருக்கும் அதனை போக்க பீட்ரூட் சாறு,
அல்லது புதினா இலை சாறு, அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள்
சிகப்பாக மாறிவிடும்.(தொடர்ந்து சிகெரட் குடிப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் பயனில்லை)
பற்களுக்கு:
எலுமிச்சை சாறு + உப்பு கலந்து அல்லது புதினா இலையை காய வைத்து அதனை தூளாக்கி இந்த தூளில் பல் தேய்த்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும்
கூந்தலுக்கு:
தலைமுடி நன்றாக கருகருவென்று வளர்வதற்கு நல்லெண்ணெய், விளக்கெண்னெய், தேங்காய் எண்ணெய் மூன்றும் சமமாக எடுத்து தலைக்கு தேய்த்து ஊரிய பின்பு குளிக்க வேண்டும்
வீட்டில் பெண்களிடம் சொல்லி மருதாணி இலை, கறிவேப்பிலை சிறிது செம்பருத்தி பூ இதனை காய வைத்து நன்றாக அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு தலைக்கு தேய்க்கலாம்.
உணவில் அதிகமாக கீரை, மற்றும் பச்சை காற்கறிகளை அதிகம் சேர்க்கவும்
இளம் நரை வந்தவர்கள் ஷாம்பு போடுவதை தவிற்க்கவும். கூந்தலை ட்ரையாக வைக்க வேண்டாம்.
சுத்தமான தேங்காய் எண்ணெய் தடவவும்.
முட்டையில் வெள்ளை கருவை தலைக்கு தேய்த்து குளிக்கலாம்
ஹேர் ட்ரை, ஸ்பிரே, ஜெல், ஹேர் கலரிங், ஸ்பார்கல் போன்றவையினை கூந்தலுக்கு அதிகமாக
பயன்படுத்த வேண்டாம்.
ஆடை
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆடைகளைத் தேர்வு செய்யும்போது, நீங்கள் போகவிருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி மனதில் கொள்ள வேண்டும்.
நண்பர்களுடம் போவதாக இருந்தால் நார்மல் உடையே போதுமானது
நெருங்கிய உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு போகும் போது சேர்வானி டிரேஸ் நன்றாக
இருக்கும்
சின்ன சின்ன நிகழ்ச்சிக்கு ஜீன்ஸ் அணிந்துகொண்டு அதற்குப் பொருத்தமாக t-shirt
அணிந்தால்,கேஷுவலாகவும்,கவர்ச்சியாகவும் இருக்கும்.
இன்னும் தென்னிந்திய அழகு கிடைக்க,பட்டுவேட்டியும் ஜிப்பாவும் நல்ல காம்பினேஷன். அழகாக இருக்கும்
ஆடைகள் வாங்கும் போழுது வெள்ளை, கறுப்பு, க்ரே, லைட்பிங்க், லைட்ப்ளூ லைட் எல்லோ, போன்ற நிறங்கள் ஷர்ட்களுக்கு நல்லாய் இருக்கும். அவர்களின் நிறத்துக்கு ஏற்றதை போல் தேர்வு செய்யவும்..
உள்ளாடைகள்
உள்ளாடைகள் தேர்வு செய்யும் பொழுதும் அதிக கவனம் தேவை அதிக இருக்கமான உள்ளாடைகள் சிலருக்கு அலர்ஜியினை ஏற்படுத்தும். காட்டன் உள்ளாடைகளை எப்பொழுதும் நல்லது.
கல்லுரிக்கு போகும் ஆணா நீங்கள்
t-shirt போட்டு (காலர் இல்லாதது) அதற்குக் கான்ட்ராஸ்ட்டான கலரில் வெளியே ஒரு ஷர்ட்
போட்டுக் கொள்ளலாம். இதுதான் இப்ப ஃபேஷன். உடைக்குப் பொருத்தமாக ஜீன்ஸ் மெட்டீரியலில் வரக்கூடிய காலணிகள் மற்றும் ஜூட் காலணிகள் போட்டடால், அசத்தலாக இருக்கும்.
இது போல் ஃபேஷன் என்று காது, கழுத்தில் எலும்புக்கூடு, மண்டை ஓடை, சைக்கள் செயின் போட வேண்டாம். இளம் இரத்தத்துக்கு அழகாக தெரிவது உங்களை பார்க்கும் பெண்களுக்கு பிடிக்காது.
வெளி அழகு 50% உள் அழகு 50% இருக்கனும், அப்பதான் நீங்கள் அழகாக மற்றவர்களுக்கு தெரிவிங்க.
உடலின் அழகை மேலும் மெருகூட்டுவதற்கு மனதை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் நிஜமான புன்னைகை எப்பொழுதும் முகத்தில் இருக்கனும்,பிறர் மீது அதிக கோபமோ, பொறாமை படுவது உங்களின் முக அழகை கெடுக்கும்.. எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதே அழகிற்கு மூலதனம் என்பதனை மறந்துவிடாதிங்க...

Sunday, August 1, 2010
அழகுக்கு அழகு சேர்க்க:
அழகுக்கு அழகு சேர்க்க சரியான உணவுகளை நாம் தேர்ந்து எடுத்து உண்டாலே நாம் எத்துனை வயதிலும் இளமையாக இருக்கலாம். அழகை பராமரிக்க சில யோசனைகள்:

அழகிய கண்களுக்கு:
பெண்களுக்கு அழகே கண்கள் தான்..தினமும் காலை எழுந்தவுடன் சுத்தமான குளிர்ந்த தண்ணீரில் கண்களை அலசவும். கண்கள் புத்துணர்ச்சி பெரும். கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ அதிகம் உள்ள உனவுகளை சாப்பிடவும். கேரட், முட்டைக்கோஸ், பீட்ரூட், பால், பழங்கள்,கீரைகள், பப்பாளி போன்ற உணவுகளை அதிகமாக சேர்க்கவும். பேரீச்சபழம் தினமும் சாப்பிட்டால் கண் தெளிவு பெரும்

நீ சிரித்தால் சிரிப்பழகு:
சிரிக்கும் பொழுது முகத்துக்கு அழகு கூட்டுவது பற்கள் தான்.
பற்களில் எப்பொழுதும் பிளாக்யு என்ற மெல்லிய கிருமிகள் இருக்கும். இதனை தடுக்க தினமும் உணவு சாப்பிட்ட பின்பு வாயினை நன்றாக கொப்பளிக்கவும். இரண்டு முறை பல் துலக்கவும். இரவில் வெந்நீரில் உப்பு போட்டு வாய்கொப்பளிக்கவும். இதன் மூலம் பல்லின் இடுக்கில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும். அதிக சூடான உணவுகளோ அல்லது அதிக குளிர்ச்சியான உணவுகளையும் சாப்பிட வேண்டாம்.

நீ நடந்தால் நடை அழகு:
கால்களை சுத்தமான வெந்நீரில் உப்பு, எலுமிச்சை சாறு போட்டு முட்டி வரை நனையும் அளவுக்கு 10 நிமிடம் தண்ணீரில் வைக்கவும். சின்ன பிரெஷ் வைத்து விரல் நகங்களை அலசவும். பின்னர் மென்மையான துணியினை வைத்து துடைத்துவிட்டு கால்களுக்கு போடும் கிரீமை தடவி மென்மையாக மசாஜ் செய்யவும்

நெற்றியிலே சரிந்து விழும்
நீள முடி அழகு
நீண்ட கூந்தல் யாருக்கு தான் ஆசையில்லை. அதற்கு அடிக்கடி அன்னாசிப்பழம், ஆப்ப்ள், கோதுமை உணவு, கீரைவகைகள், தேன், வெள்ளரிக்காய் கறிவேப்பிலை பொடி ஆகியவற்றை உணவில் அதிகமாக சேர்க்கவும். தினமும் பெண்கள் தலையினை வாரி பூ வைத்தால் அழகு கூந்தல் இன்னும் அழகாக இருக்கும்.
அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல் அழகு:
சிலருக்கு கை முட்டிகள் சொரசொரப்பாக இருக்கும் அதனை போக்க கோதுமை மாவு 1ஸ்பூன்,பால் ஏடு அல்லது எலுமிச்சை ஜீஸ் கலந்து முட்டிகளில் தேய்த்து 15நிமிடம் கழித்து அலசினால் சொரசொரப்பு மாறி பளிச்சுனு இருக்கும்॥சீனி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து ஸ்கிரப்பரால் உடல் முழுவதும் தேய்த்தால் கைகள், உடல்கள் மென்மையாகும்।இரவில் ஆலீவ் ஆயில் கைகளுக்கு தேய்து பாடுப்பதாலும் மென்மையாகும்।
நகங்கள் உறுதியாகஇரவில் விரல் மற்றும் நகத்தில் சிறிது வென்நெய் தடவவும்,விரல் நகங்கள் உறுதியாக இருப்பதற்கு வெந்நீரில் எலுமிச்சைச் சாற்றில் நகங்களை நனையுமாறு 15 நிமிடம் வைக்க வேண்டும்.நகங்களும் உறுதியாகவும் இருக்கும் ।சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசைவதால் விரல்களுக்கு நல்ல பயிற்சி। கோதுமை மாவினால் கைகள் இன்னும் மிருதுவாகும்

Saturday, July 3, 2010
பெண்களுக்கான உடை அழகு டிப்ஸ்!
உடை என்பது அனைவருக்கும் முக்கியமான ஒரு விஷயம். அதை நாம் எந்த விதத்தில் பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து நம் மீதான வசீகரத்தை கூட்ட முடியும். இது ஆண்கள் பெண்கள் இருவருக்குமே பொருந்தும் என்றாலும் இந்த முறை பெண்களுக்காக இதை கூறுகிறேன். இது வரை எழுதிய இடுகைகள் எதிலும் அவர்களுக்கு என்று தனியாக எதையும் எழுதியதில்லை, எனவே அதற்காக

உடை விசயத்தில் முக்கியமான ஒன்று அனைவரும் நம் உடல்வாகிற்கு எது பொருந்துமோ அந்த வகையான உடைகளையே தேர்வு செய்ய வேண்டும். ஆசைப்படுகிறோம் என்பதற்காக பொருத்தமில்லாத உடைகளை அணிந்து மற்றவர்கள் கிண்டலடிக்கும் படி நடந்து கொள்ளக்கூடாது.
சரியான உடைகளை தேர்வு செய்வதன் மூலம் நம்மிடம் உள்ள மைனஸ்களை பிளஸ்களாக மாற்றலாம். எடுத்துக்காட்டாக குண்டாக மற்றும் குள்ளமாக இருப்பவர்கள்,ரொம்ப ஒல்லியா இருப்பவர்கள், எனக்கு நல்ல ஸ்ட்ரக்சர் இருக்குங்க ஆனா பார்த்தால் ஸ்மார்ட்டா செக்ஸியா இல்லைன்னு நினைக்கிறவங்க இவங்க எல்லோருமே இந்த பிரச்னையை முழுவதும் இல்லை என்றாலும் ஓரளவு சரி செய்யலாம்.
முதலில் குண்டாக இருப்பவர்கள்
இவர்களுக்கு தாங்க இருப்பதிலேயே ரொம்ப சிரமம், எந்த உடை அணிந்தாலும் திருப்தி இல்லாமலே இருப்பாங்க, அதற்க்கு காரணம் தங்கள் அதிகப்படியான சதைகள் தான். உடற்பயிற்சி அது இதெல்லாம் இருந்தாலும் நாம் உடையின் மூலம் எவ்வாறு ஓரளவு சரி செய்யலாம் என்று பார்ப்போம்.
குண்டாக இருப்பவர்கள் கண்டிப்பாக ரொம்ப வழுவழுப்பான உடைகளை தேர்வு செய்யவே கூடாது, காரணம் அவ்வகையான உடைகள் உடலோடு ஒட்டி உடல் பாகங்களை வெளிப்படையாக காட்டும். குறிப்பாக மார்பு, இடுப்பு மற்றும் பின்புறம், இது பார்ப்பவர்களுக்கு ஒரு வெறுப்பையே தரும். இவ்வைகையான ஆடைகளை முற்றிலும் தவிர்த்து விடுதல் நலம், இல்லைங்க எனக்கு இந்த மாதிரி துணி தான் பிடிக்கும் என்றால் இருப்பதிலேயே குறைந்த அளவு வழுவழுப்பான உடைகளை தேர்வு செய்யுங்கள். காட்டன் வகை உடைகள் சிறந்தது. ஏங்க! எனக்கு என்ன வயசா ஆகிடுச்சு! காட்டன் புடவை எல்லாம் கட்ட!! என்றால் காட்டன் புடவைகளிலேயே பல வகை உண்டு என்பது உங்களுக்கு தெரியும், எனவே அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம்.
குள்ளமாக குண்டாக இருப்பவர்கள்
இவர்களும் வழுவழுப்பான உடைகளை கண்டிப்பாக தவிர்த்தே ஆக வேண்டும் வேறு வழியே இல்லை. இவ்வகை உடைகள் இன்னும் உயரம் குறைந்தவர்களாக காட்டும். பெண்களுக்கு மிக முக்கியமான அம்சம் குறிப்பாக குள்ளமாக இருப்பவர்களுக்கு ஷோல்டர் அகலமாக இருப்பது, உங்கள் ஷோல்டர் அகலமாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு சிலரை பார்த்தால் அவர்களுக்கு ஷோல்டர் அகலம் குறைவாக இருக்கும், அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி காட்டன் புடவைகள் தான் இவைகள் தான் உங்கள் சோல்டரை மறைத்து அகலப்படுத்தி காட்டும், அதோடு காட்டன் புடவை என்பதால் சதை பகுதிகளை அப்பட்டமாக காட்டாது.

பெண்கள் சுடிதார் அணியும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் தொள தொளன்னு அணியக் கூடாது குறிப்பாக குள்ளமாக குண்டாக உள்ளவர்கள், அதே போல ரொம்ப இறுக்கமாகவும். இடுப்பு பகுதியில் அளவு குறைத்து ஓரளவாவது ஸ்ட்ரக்சர் கொண்டு வரும் படி இருக்க வேண்டும். ரொம்ப இறுக்கமாகவும் இருந்தால் பின்புறம் அசிங்கமாக தெரியும். எனவே இடை பகுதியில் கவனமெடுத்து சுடிதார் அணிய வேண்டும்.
ஒல்லியாக உள்ளவர்கள் ரொம்ப மெல்லிய உடையை தவிர்க்க வேண்டும், இவை உடலை குச்சி குச்சியாக காட்டும். எலும்புகள் துருத்திக்கொண்டு அசிங்கமாக இருக்கும். சுடிதார் அணியும் போது கையின் அளவு ரொம்ப குறைவாக வைக்க கூடாது. இது உங்களின் நீண்ட கைகளை (ஒல்லியாக இருப்பதால்) இன்னும் நீண்டதாக காட்டும். தேர்வு செய்யும் உடை திக்கான உடையாக பார்த்துக்கொள்வது நல்லது.

நான் குண்டும் இல்ல ஒல்லியுமில்ல குள்ளமும் இல்ல பர்ஃபெக்ட்டான ஸ்ட்ரக்சர் இருந்தாலும் ஸ்மார்ட்டாக தெரியலை என்று வருத்தப்படுகிறீர்களா! இதற்கெல்லாம் காரணம் உடை மட்டுமே. ஏனோ தானோவென்று உடை அணிவதாலே அவ்வாறு தெரிகிறீர்கள். இதற்க்கும் உங்கள் முக அழகிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
கறுப்பாக மாநிறமாக இருப்பவர்கள் ப்ரைட்டான உடைகள் தேர்வு செய்வது நலம். நீங்கள் பேன்ட் அணிபவராக இருந்தால் பெண்களுக்கு என்றே தற்போது பல ப்ரேண்ட்களில் அலுவலக உடை வெளியிட்டு உள்ளார்கள், நீங்கள் அதை பயன்படுத்தலாம். பேன்ட் மற்றும் வழுவழுப்பான சட்டை தான் தற்போதைய ஃபேஷன், மாடர்னாகவும் அதே சமயம் கவர்ச்சியாகவும் இருக்கும். சுடிதார் அணிபவராக இருந்தால் சரியான ஃபிட் உள்ள இடுப்பளவு சின்னதாக உள்ள சுடிதாரை தான் தேர்வு செய்ய வேண்டும், லூசான உடைகளை அணியக்கூடாது.
நான் அலுவலகம் எல்லாம் போவதில்லை சுடிதாரும் போடுவதில்லை புடவை மட்டும் தாங்க கட்டுவேன் என்று சொல்கிறீர்களா! கவலையே படாதீங்க. உலகிலேயே டீசன்ட்டாகவும் அதே சமயம் செக்ஸியாகவும் உள்ள உடை என்றால் அது புடவை தான். நல்ல ஸ்ட்ரக்சர் உள்ளவர்களுக்கு எந்த புடவை வேண்டும் என்றாலும் கட்டலாம் அனைத்துமே சிறப்பாக இருக்கும்.

புடவை கட்டுவது பெரிய விஷயமில்லை அதை சரியான முறையில் கட்ட வேண்டும். என்னங்க நீங்க! எவ்வளவு வருசமாக புடவை கட்டுறேன் எனக்கு புடவை கட்டுறத பற்றி சொல்றீங்களே என்று கோபப்படாதீங்க. ஒரு சிலர் புடவையை ஃப்ளீட் ஒழுங்காக வைக்க மாட்டார்கள், கால் முழுவதும் மறையும் படி கட்ட மாட்டார்கள் தூக்கியபடி இருக்கும், பார்டர் சரியான பக்கத்தில் அளவில் இருக்க வேண்டும், முந்தானை நீளம் குறைவாக இருக்கும், கீழ் பகுதியில் ஃப்ளீட் சரியாக எடுத்து விடாமல் அசிங்கமாக இருக்கும், உடலை சுத்தி வைத்து கட்டியது போல இருக்க கூடாது இது மாதிரி நிறைய இருக்கு.

முக்கியமான விஷயம் பெண்களின் லோ ஹிப். பெரும்பாலும் இதை போல இப்போதைய பெண்கள் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அது அனைவருக்கும் நன்றாக இருக்காது. ஒரு சிலருக்கு மட்டுமே நன்றாக இருக்கும். இதை விலாவாரியாக விவரிக்க முடியாது என்பதால் நீங்களே புரிந்து கொள்ளுங்கள் செக்ஸியாக இருக்க வேண்டுமே தவிர ஆபாசமாகவோ அல்லது மற்றவர்கள் பார்த்து வேறு விதமாக கிண்டலடிக்கும் படியோ உடை அணியக்கூடாது. அதிகப்படியான லோ நெக் மற்றும் லோ ஹிப் அவ்வாறான தோற்றத்தை தந்து விடும். ஒரு சிலருக்கு அது அழகாக இருக்கலாம், ஆனால் அவர்கள் பெரும்பான்மையானவர்கள் கிடையாது.

அதே போல பெண்களுக்கே உள்ள எண்ணம் மிகவும் விலை உயர்வான ஆடையை அணிந்தால் மட்டுமே அழகாக தெரிவோம் என்று, இது முற்றிலும் தவறான எண்ணம். மிக குறைந்த விலைகளில் கூட அழகான புடவைகள் உள்ளது, எந்த உடையாக இருந்தாலும் நமக்கு பொருத்தமாக உள்ளதா என்று தான் பார்க்க வேண்டுமே தவிர, விலை உயர்ந்ததாக உள்ளதா என்று பார்க்க கூடாது.
நான் கூறிய எல்லாவற்றையும் விட மிக மிக மிக முக்கியமானது தன்னம்பிக்கையும், தாழ்வு மனப்பான்மை இல்லாமல் இருப்பதும் தான். ஒருவரை மிக அழகாக காட்டுவதில் மிக முக்கிய பங்காற்றுவது உடை தான், எனவே இப்படி எல்லாம் இருக்கிறோமே என்று வருத்தப்படாமல் உடைகளை உங்கள் உடல்வாகிற்கு தகுந்த மாதிரி மாற்றி அமைப்பதன் மூலம் நம்மிடம் உள்ள சில குறைகளை வெற்றி கொள்ள முடியும். இது வரை உங்களை கண்டு கொள்ளாமல் இருந்தவர்கள் நீ மட்டும் கொஞ்சம் கலராக இருந்து இருந்தா அல்லது எடை கூடி, குறைந்து இருந்தா இன்னும் நன்றாக இருக்கும் என்று சொல்லுபடி ஆகி விடும். அதே போல இன்னொரு முக்கியமான விஷயம் உடை விசயத்தில் நன்கு ஆர்வம் இருப்பவர்களால் மட்டும் தொடர்ந்து இதை பின் பற்ற முடியும், மற்றவர்கள் ஆசைக்கு ஒரு வாரம் இருந்து விட்டு வழக்கம் போல புலம்பி கொண்டு இருப்பார்கள். எந்த ஒரு செயலிலும் ஆர்வம் இருந்தால் மட்டுமே அது சிறப்பாக இருக்கும் என்பது அனைத்திற்கும் பொருந்தும் நம் உடை தேர்வு உட்பட.

மேல் நாட்டுக் கலாசாரம் தேவையா?
நான் பெண் அடிமை பற்றி பேசவில்லை மேல் நாட்டு நாகரீகம் பற்றித்தான் சொல்லி இருக்கின்றேன்.நான் முற்று முழுதாக பெண்களை அடிமைப் படுத்துவதை எதிர்ப்பவன். பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று சொல்பவன். நான் பெண் அடிமை பற்றிப் பேசுகிறேன் என்று சொல்பவர்கள் எனது பதிவுகளைப் பாருங்கள் புரியும்.
ஒரு இனமாகட்டும், சமுகமாகட்டும், மதமாகட்டும் சில நடைமுறைகள், பாரம்பரியங்கள், கலாசாரம் என்று இருக்கின்றது. அதற்கு ஏற்ற மாதிரி இருக்க வேண்டியது ஒவ்வொருவரது கடமை. எதற்காக இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைகள் நம்மை நல்வழிப்படுத்துவதற்காகவே. ஒவ்வொருவரும் தங்கள் விருப்பப்படி கட்டுக்கோப்பு இல்லாமல் இருந்தால் அது மிருகங்கள் போன்றுதான் இருக்கும்.
இன்று மேல் நாட்டு நாகரீகம் எங்களை ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கின்றது. நான் மேல் நாட்டு நாகரீகங்களை எதிர்க்கவில்லை. ஆனால் எமது கலாசாரம் பாரம்பரியங்களை சீர்குலைக்கும் மேல் நாட்டு நாகரீகங்களை எதிர்க்கிறேன். சில மேல் நாட்டு நாகரீகங்களை ஏற்றுக்கொள்ளலாம். அந்த நாகரிகத்தின் தாக்கத்தினைப் பற்றி சிந்தியுங்கள்.

அந்த இடுகையிலே நான் உடை பற்றிச் சொல்லி இருந்தேன். எந்த ஒரு சமூகமும் உடையினைக் குறை, அல்லது உடுத்த வேண்டாம் என்று சொல்லி இருக்கின்றதா இல்லையே. எதற்காக நாம் உடை அணிகின்றோம். அரைகுறை ஆடையுடன் அலைவதைவிட ஆடையின்றி திரியலாமே. சுதந்திரம் இருக்கிறதுதான் சுதந்திரம் இருக்கின்றது என்று சமூகக் கட்டமைப்பை மீறி ஆடையின்றி போக முடியுமா.

நாகரீக ஆடைகளை நாகரீக உலகுக்கு தகுந்தாற்போல் அணிய வேண்டும் . நான் இல்லை என்று சொல்லவில்லை. அரைகுறை ஆடை வேண்டாம் என்றுதான் சொன்னேன். இந்த அரை குறை ஆடையினால் எத்தனை பிரட்சனை. அவர்களை பார்த்து யாராவது ஆண்கள் ஏதும் சொல்லிவிட்டால் ஆண்கள் மீது குற்றம் சுமத்தி விடுவார்கள். யார் மீது குற்றம் அரை குறை ஆடை இன்றி தமிழ் கலாசார ஆடை அணிந்து செல்கின்ற பெண்களுக்கு ஆண்கள் அளவுக்கு அதிகமான தொல்லைகொடுக்கின்றார்களா . இல்லையே, அரை குறை ஆடை அணிபவர்களிடம் கேட்கின்றேன் நீங்கள் அணிந்திருப்பது எதற்கு அதனையும் அகற்றி விடலாமே.
பெண்களை மட்டும் நான் குற்றம் சொல்லவில்லை இன்று இளைஞர்களும் வெளிநாட்டு நாகரீக மோகத்தினால் தானும் சீரழிந்து தனது சமுகத்தையும் சீரழிக்கின்றனர். போதைப்பொருள் பாவனை இன்று எந்தளவு அதிகரித்து இருக்கின்றது. இதனால் அவர்கள் மட்டுமா இந்தச் சமூகமுமே பாதிக்கப் படுகிறது. இது தேவையா?.

இப்படிப்பட்ட வெளிநாட்டுக் கலாசாரங்களைத்தான் நான் எதிர்க்கிறேன். ஆனால் சில மேல் நாட்டுக் கலாசாரங்களை நாம் அறிந்திருக்க வேண்டும் பின்பற்ற வேண்டும். நான் இல்லை என்று சொல்லவில்லை. இன்று மேல் நாட்டுக் கலாசாரம் ஏதோ ஒரு வகையில் அவசியமாகிவிட்டது. அதற்காக வேண்டப்படாத மேல் நாட்டு கலாசாரங்களை பின்பற்றுவதை கைவிடுங்கள் என்பதுதான் என் கருத்து.
இதனை பெண் அடிமை பேசுகிறேன் என்று சொல்லவேண்டாம். என்ன சொல்கிறேன் என்பதனை புரிந்து கொண்டு விவாதியுங்கள்.
இதுபோன்ற தேவையற்ற மேல் நாட்டுக் கலாசாரங்கள் தேவையா என்பதுதான் என் கேள்வி உங்கள் கருத்துக்கள் பின்னூட்டங்களாக வாரட்டுமே...
உங்கள் விவாதங்கள் வெறுமனே பொழுது போக்குக்கான விவாதமாக இல்லாமல் மாற்றுக் கருத்துக்களுக்கு தீர்வு கிடைக்கின்ற விவாதங்களாக அமையட்டும்.

Aeroscraft விண்கப்பல்
மனித குல வரலாற்றிக் தொடக்கத்திலிருந்து, மனிதனின் அறிவியல் தேடல்களுக்கான முயற்சி என்றுமே முற்றுப்பெற்றதில்லை. தொடர்ச்சியான அறிவியற் தேடலின் மூலமாகவே மனிதகுலம் இன்றைய நவீன அறிவியல் உலகத்தை அடைந்துள்ளது. அந்த முற்றுப்பெறாத அறிவியற் தேடலின் கண்டுபிடிப்புக்களில் ஒன்றே Aeroscraft விண்கப்பல் ஆகும்.

மிகவிரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த Aeroscraft ஆனது, ஒரு கனரக விண்கப்பல் ஆகும். மின்சார இயந்திரத்தின் மூலம் இயங்கும் இந்தக் கனரக விண்கப்பல் இருநூற்றைம்பது வரையான பயணிகளையோ அல்லது 400 தொன் வரையான சரக்குகளையோ காவிச்செல்ல வல்லது. இது சாதாரண விண்கப்பல் (airship) ஒன்றைப்போன்று ஓடுபாதை இல்லாது மேலெழவோ அல்லது தரையிறங்கவோ வல்லது. சாதாரண விண்கப்பல் ஒன்றைப்போன்று இதன் விண்ணில் பறப்பதற்கான தூக்குவிசை ஹீலியம் வாயுவின் மூலம் உருவாக்கப்பட்டாலும், விமானம் போன்ற இதனது உடற்பகுதியின் வடிவமும் இதற்கான தூக்கு விசையை வழங்குகின்றது.
தேவையான மொத்தத் தூக்குவிசையின் அறுபது வீதமான பகுதி ஹீலியம் வாயுவினாலும் மீதி தூக்குவிசை இவ்வான் கப்பலின் உடற்பகுதி மற்றும் இறக்கையமைப்புக்கள் போன்றவற்றில் தாக்கும் காற்றியக்க விசையின் மூலமாகவும் வழங்கப்படுகின்றது.

1930 களின் பிற்பகுதியில் Hindenburg எனப்பட்ட வான்கப்பல் விபத்தைத் தொடர்ந்து, வான்கப்பல் மூலமான பயணிகள் போக்குவரத்து முடிவிற்கு வந்தது. அதன்பின்னர், இலகுரக வான்கப்பல்கள், விளம்பரப் பதாகைகள் பறக்கவிடல் மற்றும் தொலைக்காட்சிப் படப்பிடிப்பு போன்ற தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட போதிலும், போக்குவரத்துப் பயன்பாடுகளில் வான்கப்பல்களை ஈடுபடுத்துவதில் தயக்கம் நிலவி வந்தது. பல்வேறு நிறுவனங்கள் பாதுகாப்பானதும் வினைத்திறன் மிக்கதுமான வான்கப்பல்களை உலகிற்கு அறிமுகப்படுத்தி வந்த போதிலும், Worldwide Aeros நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுவரும் இந்த Aeroscraft எனப்படும் வான்கப்பலே பலரதும் கவனத்தை ஈர்த்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரண வான்கப்பல் ஒன்று ஹீலியம் அல்லது ஐதரசன் வாயுவினால் நிரப்பப்படும் போது அது வளியில் மிதக்கின்றது. இவ்வாறு ஹீலியம் அல்லது ஐதரசன் வாயு நிரப்பப்பட்ட வான்கப்பல் வளியில் மிதப்பதன் aeroscraft-diagramஅடிப்படைத் தத்துவம் மிகவும் எளிதானது. அதாவது அடர்த்தி குறைந்த வளியினால் நிரப்பப்படும் வான்கப்பல், அடர்த்தி கூடிய வளியில் மிதக்கின்றது. அதேபோன்று, இந்த Aeroscraft வான்கப்பலுக்கான மிதப்பு விசையின் 60 வீதமான மிதப்பு விசை, வாக்கப்பலினுள் நிரப்பப்படும் 14 மில்லியன் சதுர அடி கனவளவுடைய ஹீலியம் வாயுவினால் வழங்கப்படுவதுடன், மீதி மிதப்பு விசையானது, அது முன்னோக்கி நகரும்போது அதன் முன் மற்றும் பின் புறங்களில் அமைந்துள்ள இறக்கைகளின் மேற்பரப்புக்களில் ஏற்படுத்தப்படும் காற்றியக்க விசையின் காரணமாக உருவாக்கப்படுகின்றது.

165 அடி உயரம், 244 அடி அகலம் மற்றும் 647 அடி நீளமுடைய இந்த Aeroscraft வான்கப்பல் 400 தொன் நிறையுடன் மணிக்கு 174 மைல் வேகத்தில் 6000 மைல்கள் தொலைவிற்குப் பறக்கவல்லது.
இந்த Aeroscraft வான்கப்பலானது நான்கு சுழலிக்காற்றாடி (turbofan) இயந்திரங்களின் உதவியுடன் நிலைக்குத்தாக மேலெழவோ அல்லது தரையிறங்கவோ வல்லது. நிலைக்குத்தாக மேலெழுந்து அதன் பறப்பு உயரமான 8000 அடி உயரத்தை அடைந்ததும், ஐதரசன் மின்கலங்களின் மூலம் இயக்கப்படும் மின்னியந்திரச் சுழலிகள் இயக்கப்பட்டு விண்கப்பல் முன்நோக்கி நகரும். இவ்வாஞ மின்னியந்திரங்களின் மூலம் இயக்கப்படுவதன் காரணமாக இவ்விண்கப்பல்கள் பாரியளவில் ஒலியெழுப்புவதில்லை.
இதன் முழுமையாக கட்டுப்பாட்டுத் தொகுதிகளுக்குமான கட்டளைகள் ஒளியிழை வடங்களினூடாகவே (optical cable) பரிமாறப்படுகின்றன. இவ்வாறு ஒளியிழை வடங்களின் மூலம் தகவற் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் பறப்புக் கட்டுப்பாட்டுத் தொகுதிகள் Fly-by-Light (FBL) என்றழைக்கப்படுகின்றன. மின்கம்பி வடங்களைப் பயன்படுத்தும்போது பறப்புக்கட்டுப்பாட்டுத் தொகுதியில் ஏற்படும் மின்காந்தப்புலக் குறுக்கீடு, அவடவாறான குறுக்கீடுகளைத் தவிர்ப்பதற்காக மின்கம்பி வடங்களுக்கு இடப்படும் மேலதிக காப்புறைகளினால் ஏற்படும் நிறை அதிகரிப்பு என்பவற்றைத் தவிர்ப்பதற்காகவே, இவ்வான் கப்பலின் பறப்புக்ட்டுப்பாட்டுத் தொகுதியில் ஒளியிழை வடங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்விண்கப்பலின் பறப்புக்கட்டுப்பாட்டுத் தொகுதியிலுள்ள அனைத்துச் செயற்பாடுகளும் தன்னியக்கமாகவே நடைபெறுகின்றன. இருப்பினும், விமானிகள் இருவரும், அவசர நிலைகளைக் கையாளுதல் மற்றும் கப்பலின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக, இத்தனினியக்கச் செயற்பாடுகளைக் கண்காணித்தவண்ணமிருப்பர்.
பெரும்பாலும் இவ்வருடம் (2010) பரிசோதனை ஓட்டத்திற்குத் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த விண்கப்பல் அதிக கொள்ளளவு காவுதிறனுடன் காணப்படுவதன் காரணமாக, இராணுவ மற்றும் பொதுப்பயன்பாட்டு வழங்கல் (supply) பணிகளுக்கு உகந்ததாகக் காணப்படுகின்றது. அதுதவிர அவசரகால மீட்புப்பணி மற்றும் தீயணைப்புப் பணி போன்றவற்றிற்கும் இதன் பயன்பாடு பெரிதும் துணைபுரியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
சாதாரண விமானங்களை விட 30 வீதம் குறைவான உற்பத்திச் செலவும் 50 வீதம் குறைவான பராமரிப்புச் செலவும் கொண்ட இந்த விண்கப்பல்கள் பயன்பாட்டிற்கு வரும்போது பல்வேறுபட்ட துறைகளில் இடம்பிடித்து மனிதனுக்கு பல்வேறு வகைளில் நன்மையளிக்கும் என்பதில் ஐயமில்லை.

Subscribe to:
Posts (Atom)